Browsing: அரசியல்

சொல்லிட்டாங்க…

வலிமையான யாரையும் எதிர்க்க மாட்டோம், பலவீனமானவர்களை மட்டுமே எதிர்ப்போம் என்பது கோழைத்தனம். :- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திஅமெரிக்காவை வெறுக்கும் பாகிஸ்தான், சீனா, ஈராக் போன்ற நாடுகளுக்கான நிதி உதவி அடியோடு நிறுத்தப்படும். :- அமெரிக்க குடியரசு கட்சி வேட்பாளர் நிக்கி ஹாலேசிறையில் சில காலம் இருந்தாலும் அதைப்பற்றி கவலையில்லை. நான் பகத் சிங்கின் சீடன். :- ெடல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா சூரியன், சந்திரன் இருப்பது எவ்வளவு உண்மையோ அதே போல் பாஜ…

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நாற்காலிக்கு சிக்கல்?: சட்டசபை தேர்தலால் பாஜக தலைமை திடீர் முடிவு

போபால்: இந்தாண்டு இறுதியில் மத்தியபிரதேச தேர்தல் வருவதால், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் தேர்தலை எதிர்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பாஜக தலைமை ஆலோசித்து வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத்  தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது. பாஜகவை விட அதிக இடங்களை பெற்ற காங்கிரஸ்  கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து மூத்த தலைவர் கமல்நாத் தலைமையில் ஆட்சி  அமைத்தது. ஆனால், பின்னர் காங்கிரசில் ஏற்பட்ட பிளவுகளால், ஜோதிராதித்ய  சிந்தியாவின் ஆதரவு எம்எல்ஏக்கள் பலர்…

பிரசாரம் ஓய்ந்தது – வெறிச்சோடியது தொகுதி; ஈரோடு இடைத்தேர்தல் நாளை வாக்குப்பதிவு: 238 வாக்குச்சாவடிக்கு 1,430 ஓட்டு மெஷின் அனுப்பி வைப்பு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நாளை நடைபெறவுள்ளது. பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிந்தது. ஈரோட்டில் தங்கியிருந்து வெளியூர் தொண்டர்கள் சொந்த ஊர் திரும்பினர். இதனால், கடந்த ஒரு மாதமாக பரபரப்பாக காணப்பட்ட ஈரோடு நகரம் தற்போது வெறிச்சோடியுள்ளது.  239 வாக்குச்சாவடி மையங்களுக்கு 1,430 மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. பதற்றமான 34 வாக்குச்சாவடிகள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் நாளை( 27ம் தேதி) நடைபெறவுள்ளது.…

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்தால் பாஜவை 100க்குள் வீழ்த்தலாம்: நிதிஷ் குமார் மீண்டும் அழைப்பு

புர்னே: ‘காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் கூட்டணி சேர்ந்தால், 2024 மக்களவை தேர்தலில் பாஜவை 100 தொகுதிக்குள் தோற்கடிக்க முடியும்’ என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். வரும் 2024 மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட்டால் பாஜவை 100 தொகுதிக்குள் கட்டுப்படுத்தி வெற்றி பெற முடியும் என பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில், பீகாரின் புர்னேவில் ஐக்கிய ஜனதா தளம்,…

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் மும்முரம்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பிரசாரம் ஓய்ந்த நிலையில், வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 238 வாக்குச்சாவடிகளிலும் இறுதி கட்ட ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக, சுயேச்சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். Source link

சொல்லிட்டாங்க…

என்னுடைய காலத்திலேயே நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றே தீருவேன். அதை பெற தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறேன். : – முதல்வர் மு.க.ஸ்டாலின்ரஷ்யா, உக்ரைன் விவகாரத்தில் அமைதிக்கான நடவடிக்கைகளில் இந்தியா பங்களிக்க தயாராக உள்ளது. : – பிரதமர் மோடிகுளறுபடிகளுடன் மிகவும் தாமதமாக தொடங்கிய, குரூப் 2 முதன்மை தேர்வை ரத்து செய்ய வேண்டும். :- பாமக தலைவர் அன்புமணிகாங்கிரஸ் கட்சிக்கு திருப்பு முனையாக அமைந்த தேச ஒற்றுமை யாத்திரையுடன் எனது அரசியல் பயணம் நிறைவடைகிறது. :-…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது. மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடிவடைந்தாக கூறப்பட்ட நிலையில் மேலும் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டது.ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 27ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா உள்பட 77 வேட்பாளர்கள்…

அன்புஜோதி ஆசிரம வழக்கில் கைதான நிர்வாகி உள்பட 8 பேரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி: விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் ஆதரவற்றோர் துன்புறுத்தப்பட்டது மற்றும் அங்குள்ள பெண்களுக்கு பாலியல் தொந்தரவு, மற்றும் ஆசிரமத்தில் பலர் மாயமான விவகாரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பாக கடந்த 10ம் தேதி ஆசிரமத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் அன்புஜோதி ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், ஆசிரம மேலாளர் பிஜி மோகன், பணியாளர்கள் ஐயப்பன், கோபிநாத், முத்துமாரி உள்ளிட்ட 8 பேர் மீது 13 பிரிவின் கீழ்…

மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 எப்போது வழங்கப்படும் என்பது குறித்து பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஈரோடு : மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 எப்போது வழங்கப்படும் என மார்ச் மாதம் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என்று ஈரோடு கிழக்கு பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல் அளித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில், திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், ‘என் உயிரோடு கலந்தது ஈரோடு, பேரறிஞர் அண்ணா வாழ்ந்த ஊர், கலைஞர் குடியிருந்த ஊர்.பெரியார் பிறந்த மண் ஈரோடு, திமுகவின்…

இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

சேலத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் விதிமீறல்கள் அதிகளவு நடக்கிறது. தேமுதிக உள்பட பல்வேறு கட்சிகள், விதிமீறல் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார்களை தெரிவித்துள்ளது. ஆனாலும் ஆணையம், அதனை கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இந்த விதிமீறல்களுக்காக இடைத்தேர்தல் நிறுத்தப்பட வேண்டும். அதிமுகவில் நடக்கும் பிரச்னை அவர்களது உட்கட்சி விவகாரம். உச்சநீதிமன்றத்தில் வந்திருக்கும் தீர்ப்பு தற்காலிகமானது என ஓ.பன்னீர்செல்வம் சொல்லி வருகிறார். அதனால், அதிமுகவின் நிலைப்பாட்டை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இவ்வாறு பிரேமலதா…

1 16 17 18 19 20 161