Browsing: அரசியல்

தமிழக மக்களை தவறாக கூறவில்லை தமிழிசை விளக்கம்

அவனியாபுரம்: சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலைய ஆளுநருமான தமிழிசை சவுந்தர்ராஜன் கூறியதாவது: ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ள கருத்துக்களை அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள். தமிழக மக்கள் எங்களது திறமைகளை அடையாளம் கண்டு கொள்ளவில்லை என்றுதான் கூறினேன். தமிழக மக்களை பற்றி நான் தவறாக சொல்லவில்லை. தமிழக மக்கள் எங்களுக்கு ஆதரவு தரவில்லையே என்றுதான் சொன்னேனே தவிர, நாங்கள் என்றும் தமிழக மக்கள் மீது பாசம் உள்ளவர்களாக தான் உள்ளோம்.…

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு

ஈரோடு: ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தலித் சமுதாயத்தை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலித் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் சீமான் மீது கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. Source link

அரசியலில் இருந்து ஓபிஎஸ் நாக்அவுட் ஆகிவிட்டார்: ஜெயக்குமார் பேட்டி

ஈரோடு: அரசியலில் இருந்து ஓபிஎஸ் நாக்அவுட் ஆகிவிட்டார் என ஈரோட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் தவிர அதிமுகவுக்கு யார் வந்தாலும் அரவணைத்து ஏற்றுக்கொள்வோம் எனவும் கூறினார். Source link

ஒரு மாதத்தில் ஓபிஎஸ் கவர்னராகவும், இபிஎஸ் பாஜ தலைவராகவும் மாறுவார்கள் ஆடியோ, வீடியோவை வைத்து கட்சி நடத்தும் பாஜ: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் 2வது நாளாக நேற்று சூரம்பட்டி நால்ரோடு, ஆலமரத்து தெரு, காமாட்சி காடு, கருங்கல்பாளையம் காந்திசிலை உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் நமது வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்தால் நான் மாதம் ஒரு முறை…

சொல்லிட்டாங்க…

* நாட்டில் ஒவ்வொரு நபரும் தனது தாய்மொழியை வளமாக்கினால், அனைத்து மொழிகளும் செழிக்கும். – உள்துறை அமைச்சர் அமித்ஷா * காங்கிரஸ் தலைவர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை அரசியல் பழிவாங்கும் செயல். இதற்கு காங்கிரஸ் பயப்படாது. – காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால்* நாட்டு மக்கள் மாஸ்க் அணியாமல் சுதந்திரமாக நடமாடுவதற்கு மோடியின் தொலைநோக்கு பார்வையே காரணம். – பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா* ஆங்கிலம் உலகத்தில் உள்ள எல்லா மொழிகளையும் கடன் வாங்கி கலப்பு மொழியாகிவிட்டது.…

எடப்பாடி பழனிசாமி டெல்லியில் உள்ள எஜமானார்கள் மோடி, அமித்ஷாவுக்கு தான் உண்மையாக இருக்கிறார்.! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை

ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், “ஓபிஎஸ் விரைவில் மாநில ஆளுநராகிவிடுவார். எடப்பாடி பழனிசாமி விரைவில் பாஜக தலைவராகி விடுவார். எடப்பாடி பழனிச்சாமி எப்படி முதல்வர் ஆனார் என்பதை மறந்து விட்டு ஈரோட்டில் பேசி வருகிறார். சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் பதவியை பெற்ற பழனிசாமிக்கு மீசையை பற்றி பேச அருகதை இல்லை. எடப்பாடி பழனிசாமி யாருக்காவது உண்மையாக இருந்திருக்கிறாரா?…

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்ய கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் தேமுதிக மனு.!

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்ய கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் தேமுதிக மனு அளித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பில் ஈபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசு போட்டியிடுகிறார். இதேபோல் தேமுதிக மற்றும் நாம் தமிழர்…

மீண்டும் மீண்டுமா..! .. தேர்தல் பரப்புரையில் அண்ணாமலை பேசும்போது தூங்கி விழுந்த அதிமுக வேட்பாளர் தென்னரசு!

ஈரோடு : ஈரோடு இடைத் தேர்தல் பரப்புரையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசிக் கொண்டு இருந்த போதே அவர் அருகில் இருந்த அதிமுக வேட்பாளர் தென்னரசு தூங்கி விழுந்த காட்சி பார்ப்போரை நகைப்புக்கு உள்ளாகியது. அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக வீரப்பசத்திரம், கிருஷ்ணம்பாளையம், கருங்கல்பாளையம் , காந்திசிலை ஆகிய இடங்களில் பாஜக மாநில அண்ணாமலை வாக்கு சேகரித்தார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான முந்தைய அதிமுக ஆட்சியில் ஈரோடு தொகுதிக்கு செய்யப்பட்ட நலத் திட்டங்களையும் ஒன்றிய அரசின்…

அதிமுகவினர் வீதிவீதியாக விநியோகம் வாக்காளர்களுக்கு வெள்ளி கொலுசு, குக்கர், ரூ.1000

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரசாரத்துக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அதிமுகவினர் இத்தொகுதி முழுவதும் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு கொலுசு, குக்கர் மற்றும் தலா ரூ.1000 பணம் விநியோகம் செய்ய துவங்கியுள்ளனர். பாக்கெட்டுகளில் அடைத்து கொலுசு வழங்கி வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட நிர்வாகிகள், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பறக்கும் படை அதிகாரிகள் நேற்று மாலை சிந்தா நகர், மாதவ…

பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர்: மாவட்ட இணை பொது செயலாளர் தொழுவூர் கபிலன் ஒருங்கிணைத்தார். தொகுதி தலைவர் திருவூர் ஆர்.டில்லி தலைமை தாங்கினார். முன்னதாக  மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் தண்ணீர்குளம் வி.பி.ராஜேஷ்குமார்  வரவேற்றார். தொகுதி துணைத் தலைவரும், ஊராட்சி மன்ற தலைவருமான வதட்டூர் நாகராஜ், தொகுதி நிர்வாகிகள் தலக்காஞ்சேரி பிரபு, மணமேடு தயாநிதி ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட அலுவலக செயலாளர் அம்பேத் ஆனந்த், மாவட்ட பொருளாளர் பூவை எம்.ஜெய்பீம் செல்வம், மாவட்ட இளைஞரணி தலைவர் திருவள்ளூர் வெற்றிவேந்தன்…

1 18 19 20 21 22 161