Browsing: அரசியல்

குற்றாலம் பேரூராட்சி துணைத் தலைவராக அதிமுக வேட்பாளர் தேர்வு

தென்காசி: குற்றாலம் பேரூராட்சி துணைத்தலைவராக அதிமுகவை சேர்ந்த தங்கபாண்டி தேர்வு செய்யப்பட்டார். பேரூராட்சி தலைவராக அதிமுகவை சேர்ந்த கணேஷ் தாமோதரன் தேர்வான நிலையில் துணைத் தலைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  Source link

கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேர்தலில் திமுக கவுன்சிலர் சுமித்ரா தேவி போட்டியின்றி தேர்வு..!!

கரூர்: கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேர்தலில் திமுக கவுன்சிலர் சுமித்ரா தேவி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். ஒன்றிய குழு தலைவராக இருந்த அதிமுகவை சேர்ந்த சந்திரமதி மீது கடந்த ஜனவரியில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் ஒன்றிய குழு தலைவர் பதவியில் இருந்து சந்திரமதி பதவிநீக்கம் செய்யப்பட்டார். Source link

பாமக சிறப்பு செயற்குழு கூட்டம் வரும் 28ம்தேதி நடக்கிறது: அன்புமணி தலைவராகிறார்? அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

சென்னை: பாமகவை அற்புதமாக ஜி.கே.மணி வழிநடத்தினார் என்று ராமதாஸ் புகழாரம் சூட்டினார். அதேநேரம் வரும் 28ம்தேதி பாமக சிறப்பு செயற்குழு கூட்டம் கூடுவதாக ஜி.கே.மணி அறிவித்தார். இந்த கூட்டத்தில் அன்புமணியை பாமக தலைவராக்குவதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாமக தலைவராக ஜி.கே.மணி பொறுப்பேற்று 25 ஆண்டுகள் ஆவதையொட்டி, அவருக்கு பாராட்டு விழா பாமக சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு, மாநில இளைஞரணி தலைவர் அன்புமணி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ராவணன்…

சொல்லிட்டாங்க…

* மாநிலங்களின் அனைத்து நிதி உரிமைகளையும் சுரண்டி தின்றுவிட்டு- ஒருவிதமான பொருளாதார நெருக்கடியை அனைத்து மாநில அரசுகள் மீதும் பாஜ அரசு சுமத்துகிறது. – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்* கொரோனா பெருந்தொற்றின் கடினம் நிறைந்த சூழலிலும் குவாட் உறுப்பு நாடுகள் பரஸ்பர ஒத்துழைப்பினை வழங்கின. – பிரதமர் நரேந்திர மோடி* ஆம் ஆத்மி கட்சிக்கு பஞ்சாப் மக்கள் பெரிய நம்பிக்கையுடன் வாக்களித்து உள்ளனர். ஒரு சதவீத ஊழலை கூட என்னால் சகித்துக்கொள்ள முடியாது. – பஞ்சாப் முதல்வர்…

ஆஷாக்களுக்கு கிடைத்த விருதால் இந்தியாவிற்கு பெருமை: ஜி.கே.வாசன் அறிக்கை

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: உலக முழுவதும் 6 உலக சுகாதார தலைவர்கள் விருது உலக சுகாதார அமைப்பு(டபிள்யூஎச்ஓ) சார்பாக வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றாக இந்தியாவில் உள்ள “ஆஷா” ஒட்டுமொத்த பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது மிகுந்த போற்றுதலுக்குரியது, பாராட்டுக்குரியது. ஆஷா அமைப்பினர் சகிப்புத்தன்மையோடும், அர்பணிப்பு உணர்வோடும் மக்களுக்கு ஆற்றிய பணி போற்றுதலுக்குரியது. கொரோனாவின் தாக்கத்தைப் பற்றி பாமரர் முதல் படித்தவர் வரை விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை காப்பதில் முழு பங்காற்றி தங்களின் அயராத உழைப்பின் மூலம்…

பெட்ரோல், டீசல் விலை இனி உயராது என்ற உறுதிமொழியே உண்மையான தீர்வை தரும்: ஒன்றிய அரசு நாடகமாடுவதாக கமல்ஹாசன் குற்றச்சாட்டு

சென்னை: பெட்ரோல், டீசல் விலை இனி உயராது என்ற உறுதி மொழி தான் உண்மையான தீர்வை தரும் என்றும், இதில் ஒன்றிய அரசு நாடகமாடுகிறது என்று கமல்ஹாசன் குற்றச்சாட்டியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த சில மாதங்களில் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.10க்கும் அதிகமாக உயர்த்திவிட்டு, இப்போது அதற்கும் குறைவாகவே விலையைக் குறைத்துள்ளனர். இது நிச்சயம் மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்காது. பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100ஐ…

குடிநீர் வாரிய ஓய்வூதியதாரர்களுக்கு 14 சதவீத அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திலிருந்து ஓய்வுபெற்ற பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின் 14 சதவீத அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. ஓய்வுபெற்ற பெரும்பாலான ஊழியர்கள் வறுமை நிலையில் இருப்பதாகவும், மருத்துவம் மற்றும் வீட்டு வாடகைக்கு மட்டுமே பெரும் தொகை செலவிடப்படுவதாகவும் கூறுகின்றனர். எனவே, இந்த தருணத்தில் 14 சதவீத அகவிலைப்படி உயர்வை இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ரொக்கமாக அளித்தால் பேருதவியாக இருக்கும். பணியில்…

ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து தமிழகத்தில் 26, 27ம் தேதி ஆர்ப்பாட்டம்: இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக கூட்டாக அறிவிப்பு

சென்னை: ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 26, 27ம் தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் மற்றும் விசிக ஆகிய கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பாலகிருஷ்ணன்…

சொல்லிட்டாங்க…

பொருளாதாரத்தில், கார்ப்பரேட்டை காப்பாற்ற வேண்டும் என்கிற வகையில் ஒன்றிய அரசின் நடவடிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது.- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்அனைத்து பொருட்களின் விலையும் ஏறுவதை எதிர்கொள்ள முடியாமல் பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய பாஜ அரசு பெயரளவில் குறைத்திருக்கிறது.- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி2014ல் மோடி ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்றனர். மாறாக, பல்லாயிரக்கணக்கானோர் வேலையிழந்துதான் ஒன்றிய அரசின் சாதனை.- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்பேரறிவாளன் விடுதலையில்…

விவசாயிகள் நலனுக்காக 7 தொலைநோக்கு திட்டங்களை உருவாக்கி உள்ளோம் : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!!

சென்னை :  தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (23.5.2022) தலைமைச் செயலகத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ‘முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய எண்ணமாக இருக்கக்கூடிய  உழவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் நலனைப் பாதுகாத்திடவும், இந்தியாவில் முதன்முறையாக வேளாண்மைக்கு இலவச மின்சாரம் தந்து சாதனை படைத்தார்கள்.  உழவர்களின் வருமானத்தைப் பெருக்குவதற்காக விளைபொருட்களை, பேருந்தில் இலவசமாக எடுத்துச் செல்லலாம் என்று அறிவித்தார்கள், அதை நடைமுறைப்படுத்திக் காட்டினார்கள்.…

1 147 148 149 150 151 161