Browsing: அரசியல்

திமுக மாணவர் அணி சார்பில் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம்

தண்டையார்பேட்டை: சென்னை வடக்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் திராவிட மாடல் ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் மற்றும் கலைஞர் 99வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் ராயபுரம் எஸ்.என்.செட்டி தெருவில் உள்ள அறிவகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட பொறுப்பாளர் இளைய அருணா தலைமை வகித்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் கோவிந்தசாமி செய்திருந்தார். சிறப்பு அழைப்பாளராக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டு ரத்ததான முகாமை தொடங்கிவைத்தார். ரத்ததானம் செய்தவர்களுக்கு…

அதிமுக தொண்டர்கள் அனைவரும் அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்: ஓபிஸ் டிவிட்

சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து விவாதங்கள் மற்றும் சர்ச்சைகள் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில், அதிமுக தொண்டர்கள் அனைவரும் அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Source link

ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ‘ஒற்றை தலைமை ஏற்க வேண்டும்’: போடி, ராமநாதபுரத்தில் பரபரப்பு

போடி: அதிமுகவின் ஒற்றை தலைமையாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது ஆதரவாளர்கள் ராமநாதபுரம் மற்றும் தேனி மாவட்டம் போடி, சின்னமனூர் பகுதிகளில் வைத்துள்ள பேனர்கள் மற்றும் போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் அதிமுக பொதுக்குழு வரும் 23ம் தேதி கூடுகிறது. இது தொடர்பான கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் முன்னாள் முதல்வரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக,…

ஒரு எம்எல்ஏ மதிப்பு எவ்வளவு? – Dinakaran

நாட்டில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டசபை உறுப்பினர்கள் 4120 பேர் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதி உடையவர்கள். இதில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு எம்எல்ஏ வாக்கு மதிப்பு மாறுபடுகிறது. 1971ம் ஆண்டு மக்கள் தொகை கணக்குப்படி எம்எல்ஏ மதிப்பு கணக்கிடப்படுகிறது. 2026ம் ஆண்டு வரை இதே நிலைதான் நீடிக்கும். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தற்போது எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்குப்படி ஒரு எம்எல்ஏவின் வாக்குமதிப்பு மாறும்.தற்போது ஒரு எம்எல்ஏ வாக்கு மதிப்பு…

ஜனாதிபதி தேர்தலில் நம்பர் கேம் ஆரம்பம் அந்த 13 ஆயிரம் ஓட்டுகள்…

* சரத்பவார் பெயரை முன்மொழியும் எதிர்க்கட்சிகள் * வேட்பாளரை இறுதி செய்வதில் பா.ஜ கடும் குழப்பம்16வது ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியானதும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்நிறுத்த காங்கிரஸ் வகுத்த வியூகத்தால் வெலவெலத்து போய் நிற்கிறது ஆளும் பா.ஜ. ஒன்றிய அரசு அவர்கள் கையில், பெரும்பான்மை மாநிலங்கள் அவர்கள் கையில், மாநிலங்களவையில் வேறு 112 எம்பிக்களை  எட்டி சாதனை என்றெல்லாம் மார் தட்டி வந்த பா.ஜவுக்கு சற்று சறுக்கல்…

காலியாகும் இடங்களை நிரப்பும் வகையில் 50,000 இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: அன்புமணி வேண்டுகோள்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப்பள்ளிகள், 6587   நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட, தொடக்கப்பள்ளிகளில் 1,14,155 வகுப்புகள், நடுநிலைப்பள்ளிகளில் 52,696 வகுப்புகள் என மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை.தமிழ்நாடு முழுவதும்…

ஆளுநர் ஆர்.என்.ரவியா ஆர்.எஸ்.எஸ். ரவியா?..திருமாவளவன் காட்டம்

கரூர்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்எஸ்எஸ் ரவியாக இயங்கிக்கொண்டு இருக்கிறார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.கரூர் மாவட்டம் தோகைமலையில் திருமாவளவன் அளித்த பேட்டி: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்எஸ்எஸ் ரவியாக இயங்கிக்கொண்டு இருக்கிறார். ஒவ்வொரு நிகழ்விலும், ஒவ்வொரு பேச்சிலும் அவர் தன்னை ஒரு ஆர்எஸ்எஸ்காரர் என்று காட்டிக்கொள்வதிலேயே குறியாக இருக்கிறார். அவர் ஆளுநர் பதவியில் இருந்து விலகி முழுநேர ஆர்எஸ்எஸ் தொண்டராக பணியாற்றுவதுதான் பொருத்தமானது. எனவே அவர் பதவி விலக வேண்டும் என்பதுதான்…

அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என தொண்டர்கள் முழக்கம்

சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என தொண்டர்கள் முழக்கமிட்டனர். அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெளியே ஒரு தரப்பினர் ஒற்றை தலைமை வேண்டும் என கோரி முழக்கம் எழுப்பி வருகின்றனர். மற்றோரு தரப்பினர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையேற்க வேண்டும் என முழக்கமிட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. Source link

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் குறித்து ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் இன்று ஆலோசனை

சென்னை : அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் குறித்து ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது.  இக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  அதிமுக செயற்குழு- பொதுக்குழு நடத்துவது தொடர்பாக நிர்வாகிகள் மற்றும் அதிமுக செயலாளர்கள் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. Source link

ராகுல் காந்தியிடம் விசாரணை எதிரொலி அமலாக்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு காங். போராட்டம்: சென்னையில் 500 பேர் கைதாகி விடுதலை

சென்னை: ராகுல் காந்தியிடம் அமலாக்க துறையினர் விசாரணை நடத்தியதை கண்டித்து சென்னையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்தினர். நேஷனல் ஹெரால்டில் முறைகேடு நடைபெற்றதாக கூறி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் அமலாக்கத்துறை முன் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல்காந்தி நேற்று ஆஜரானார். இந்த நிலையில், ராகுல்காந்தியிடம் ஒன்றிய அமலாக்கத்துறை விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி நேற்று நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம்…

1 137 138 139 140 141 161