Browsing: அரசியல்

ஊழல் குறித்து பேச பாஜகவுக்கு தகுதியே இல்லை: சீமான் ஆவேசம்

சென்னை: 8 ஆண்டுகளாக ஒன்றிய அரசின் சாதனையை செய்தியாளர் சந்திப்பின் மூலம் பிரதமர் மோடி சொல்ல முடியுமா? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். வேற்று அறிவிப்புகளை மட்டுமே ஒன்றிய அரசு வெளியிடுகிறது; ஊழல் குறித்து பேச பாஜகவுக்கு தகுதியே இல்லை எனவும் விமர்சனம் செய்துள்ளார். Source link

கர்நாடகா உள்ளிட்ட 4 மாநிலங்களில் 16 ராஜ்யசபா எம்பி பதவிக்கு விறுவிறு வாக்குப்பதிவு : கட்சி மாறி எம்எல்ஏக்கள் ஓட்டு? இன்று மாலை முடிவுகள் அறிவிப்பு

புதுடெல்லி: கர்நாடகா உள்ளிட்ட 4 மாநிலங்களில் காலியாக உள்ள 16 ராஜ்ய சபா எம்பி பதவிக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. ஒன்றிய அமைச்சர்கள்  பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன் போன்றோரின் தலைவிதி தீர்மானிக்கப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாகும் 57 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு 10ம் தேதி (இன்று) தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம், ஒடிசா, சட்டீஸ்கர், பஞ்சாப்,…

மகாராஷ்டிரா மாநிலங்களவை தேர்தலில் பியூஷ் கோயல் வெற்றி

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக நடந்த தேர்தலில் பாஜக 3 இடங்களில் வெற்றி பெற்றது. ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல், அணில் போன்டே, சஞ்சய் தனஞ்செய் மதிக் ஆகியோர் பாஜக சார்பில் வெற்றி பெற்றனர். Source link

திருவள்ளூரில் பூண்டி ஒன்றிய செயலாளர் இல்ல திருமணம் அதிமுகதான் எதிர்கட்சி; பாஜ அல்ல: தேமுதிக பொருளாளர் பிரேமலதா விளாசல்

திருவள்ளூர்: பூண்டி ஒன்றிய தேமுதிக செயலாளர் புதூர் ஜெ.பாலாஜி-ஒன்றிய கவுன்சிலர் பி.பிரபாவதி இல்ல திருமண விழா திருவள்ளூரில் நடந்தது. மாவட்ட செயலாளர் டி.கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். நகர செயலாளர் எஸ்.மணிகண்டன், மாவட்ட நிர்வாகிகள் ஆயில் கே.சரவணன், புஜ்ஜி ஜெ.முரளி கிருஷ்ணன், ஒண்டிகுப்பம் ஆர்.சேகர் வரவேற்றனர். விழாவுக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தலைமை வகித்து, மணமக்களை வாழ்த்தி பேசினார். இதைதொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதை தேமுதிக ஒரு போதும் அனுமதிக்காது. கும்மிடிப்பூண்டி…

ராஜஸ்தான் மாநிலங்களவை தேர்தலில் 3 இடங்களை கைப்பற்றியது காங்கிரஸ்

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலங்களவை தேர்தலில் 3 இடங்களை காங்கிரஸ் கட்சியம், 1 இடத்தை பிஜேபியும் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முகுல் வாஸ்னிக், ரந்தீப் சுர்ஜேவாலா, பிரமோத் திவாரி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் பாஜகவின் கன்ஷியாம் திவாரி வெற்றி பெற்றுள்ள நிலையில், சுயேட்சை வேட்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் தோல்வியடைந்துள்ளார். Source link

அரியானாவில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்

அரியானாவில் நடைபெற்று வந்த மாநிலங்களைவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. வாக்குபதிவின் போது ரகசியத்தை காக்கத் தவறியதாக பாஜக குற்றசாட்டு விடுத்த  நிலையில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. ரகசியத்தை காக்க தவறியதால் அரியானாவில் நடந்த மாநிலங்களவை தேர்தலை செல்லாது என அறிவிக்க பாஜக முறையிட்டுள்ளது. Source link

சொத்துக்களைக் கைப்பற்றும் முயற்சிக்கு எதிராக நீதிகேட்டு வலுவான மக்கள் போராட்டம்: எஸ்.டி.பி.ஐ. அறிவிப்பு

சென்னை: எஸ்.டி.பி.ஐ. கட்சி தேசிய துணைத் தலைவர் ஷர்புதீன் வெளியிட்ட அறிக்கை:இறைத்தூதர் அவமதிப்பு தொடர்பான பாஜ நிர்வாகிகளின் பேச்சுக்கு எதிர்ப்பு  தெரிவித்து, கான்பூரில் நடந்த போராட்டத்தின்போது நடந்த  வன்முறை தொடர்பாக,   ஒருதலைப்பட்சமாக குற்றம் சாட்டப்பட்ட முஸ்லீம்களின் சொத்துக்களைக்  கைப்பற்றி, அவர்களின் வீடுகளையும், கட்டிடங்களையும் புல்டோசர் கொண்டு  இடித்துத் தள்ளும் உ.பி. பாஜ அரசாங்கத்தின் திட்டத்தை கடுமையாக கண்டிக்கிறேன். குற்றம் சாட்டப்பட்டவர்களை தண்டிக்க அரசாங்கத்திற்கோ அல்லது எந்த அதிகாரத்திற்கோ உரிமை இல்லாதபோதும், மக்களின் சொத்துக்களை கைப்பற்றுவதில், புல்டோசர் கொண்டு…

ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் – Dinakaran

ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞர் பிறந்தநாள் மற்றும் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நேற்றுமுன்தினம்பூரிவாக்கம், அத்தங்கிகாவனூர், அழிஞ்சிவாக்கம் உள்பட பல்வேறு கிராமங்களில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தெற்கு ஒன்றிய செயலாளர் ஆ.சத்தியவேலு தலைமை தாங்கினார்.மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் டி.கே.முனிவேல், முருகன், துர்கா, சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் உதயகுமார், முனுசாமி, சுந்தரம், நாகராஜ், கவியரசன் ஆகியோர் வரவேற்றனர்.இக்கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் சேலம்…

திருப்போரூர் ஒன்றியத்தில் 53 அடி உயர பாமக கொடி கம்பம்: அன்புமணி கொடியேற்றினார்

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம் கொட்டமேடு கிராமம் உள்ளது.  இங்கு, பா.ம.க. சார்பில் அந்த கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்ற அன்பு மணிக்கு 53 வயது ஆவதை குறிக்கும் வகையில் 53 அடி உயர கொடி கம்பம் அமைக்கப்பட்டது. இதற்கான கல்வெட்டு திறப்பு மற்றும் கொடியேற்று விழா நேற்று புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதற்கு, முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாநில வன்னியர் சங்க துணைத்தலைவருமான திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். பா.ம.க. மாவட்ட செயலாளர் காரணை இராதாகிருஷ்ணன் வரவேற்றார். முன்னாள்…

நிலக்கரி நிறுவனத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு: ராமதாஸ் வரவேற்பு

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்க 11 கிராமங்களில் கையகப்படுத்தப்பட்ட சுமார் 8000 ஏக்கர் நிலங்களை, அதற்கான இழப்பீட்டை திரும்ப வசூலிக்காமல், அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க அரசு ஆணையிட்டுள்ளது. இது மகிழ்ச்சியளிக்கிறது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ35,000 என்ற மிகக்குறைந்த விலையே தரப்பட்டதால் அதிக இழப்பீடு தர வேண்டும் அல்லது நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக…

1 139 140 141 142 143 161