ஒற்றை தலைமைக்கே பெரும்பாலானோர் ஆதரவு எடப்பாடி மீது வழக்கு தொடர்ந்தால் வென்று காட்டுவார்: ஓபிஎஸ்சுக்கு ஓ.எஸ்.மணியன் பதிலடி
சென்னை: ஒற்றை தலைமைக்கே பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். எடப்பாடி மீது வழக்கு தொடர்ந்தால் அவரே வென்று காட்டுவார் என்று ஓபிஎஸ்சுக்கு, முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதிலடி கொடுத்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சந்தித்து பேசினார். சந்திப்புக்கு பின்னர் ஓ.எஸ்.மணியன் அளித்த பேட்டி: அதிமுக தலைமை கழகத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் கிட்டத்தட்ட மிகப்பெரும்பான்மையானவர்கள் ஒற்றை தலைமை வேண்டும் என்று பேசினர். இது குறித்து தான்…









