Browsing: அரசியல்

சொல்லிட்டாங்க…

* நாட்டில் 112 மாவட்டங்களை மேம்படுத்த 2018ம் ஆண்டில் ‘உயர் லட்சிய மாவட்டங்கள் திட்டம்’ தொடங்கப்பட்டது. இது மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. – பிரதமர் மோடி* ராணுவத்தில் 4 ஆண்டுகாலம் பணியாற்றிய பின், வேறு துறையில் வேலை கொடுக்கப்படும் என்ற அறிவிப்பு ஏமாற்று நடவடிக்கை.- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்* இந்திய ராணுவத்தை காவி மயமாக்க வேண்டும் என்கிற ஆர்எஸ்எஸ் கொள்கையை செயல்படுத்துவதற்கான மறைமுக திட்டமே ‘அக்னிபாத்’ என்ற ஐயம் ஏற்படுகிறது.- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ*மேகதாதுவில்…

நான் நகரம்டா… நான் மாநிலம்டா…. பாஜ நிர்வாகிகள் நடுரோட்டில் மோதல்: வீடியோ வைரலால் பரபரப்பு

அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வைரிவயலைச் சேர்ந்தவர் கவிதாஸ்ரீகாந்த். பாஜக மாநில மகளிரணி செயலாளராக இருந்த இவரை சமீபத்தில் அக்கட்சி மேலிடம் மாநில மகளிரணி பொதுச் செயலாளராக அறிவித்தது. இதைத் தொடர்ந்து கவிதாஸ்ரீகாந்த் தனக்கு பொறுப்பு வழங்கிய மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்து அறந்தாங்கியில் 6 இடங்களில் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளார். இந்த பேனரில் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் மற்றும் அறந்தாங்கி நகரத் தலைவர் படம் இடம் பெறவில்லை.இதனால் ஆத்திரமடைந்த அறந்தாங்கி நகர பாஜக…

ஓபிஎஸ் தலைமை ஏற்றால் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுகவில் இணைவார்கள்: உ.தனியரசு பேட்டி

சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை வருவது என்றால் அது ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தான் வர வேண்டும் என உ.தனியரசு தெரிவித்துள்ளார். அதிமுகவில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் உச்சக்கட்ட மோதலை தடுக்க சமரச முயற்சி நடைபெற்று வருகிறது. அதன்படி 4வது நாளாக இன்றும் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். தற்போதுள்ள சூழ்நிலையில், தனது நிலைப்பாட்டை ஓபிஎஸ் தெளிவாக சொல்லிவிட்டதால், இப்போதைக்கு எடப்பாடி ஒற்றை தலைமை கோரிக்கையை கைவிடுவதா, அல்லது ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்றுவதா…

திருவள்ளூரில் பட்டியலின மக்களின் வாழ்விட பிரச்னைக்கு தீர்வு காணக்கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டியலின மக்களின் வாழ்விட பிரச்னைக்கு தீர்வு காணக்கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எழுதிய கடிதம்:திருவள்ளூர் மாவட்டம் ராஜா நகரம் ஊராட்சியில் வசித்து வரும் தலித் மக்களுக்கு 1994ல் 67 குடும்பத்திற்கும், 2002ல் 40 குடும்பத்திற்கும் என அதிமுக ஆட்சிக் காலத்தில் 107 தலித் குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. பட்டா வழங்கி 27 ஆண்டுகள் கடந்த பிறகும் இதுவரை அம்மக்களால்…

ஒற்றை தலைமையை கைவிடாவிட்டால் போட்டி பொதுக்குழு? மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ் நாளை ஆலோசனை: அதிமுக மீண்டும் 2ஆக உடையும் ஆபத்து

சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை முடிவை எடப்பாடி பழனிசாமி கைவிடாவிட்டால், போட்டி பொதுக்குழு நடத்த ஓபிஎஸ் அணியினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் நாளை ஆலோசனை நடத்துகிறார். அப்படி நடத்தும்பட்சத்தில் அதிமுக கட்சி மீண்டும் 2ஆக உடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 23ம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து விவாதிக்க கடந்த செவ்வாய்க்கிழமை சென்னையில்…

ஒற்றை தலைமை பிரச்னையால் உச்சக்கட்ட மோதல் அதிமுக ஆபிசில் ஓ.பன்னீர்செல்வம் திடீர் ஆலோசனை: ஒற்றைத் தலைமை பற்றிய தீர்மானத்தை சேர்க்க கூடாது என எச்சரித்தார்: சேலத்தில் எடப்பாடியுடன் நிர்வாகிகள் சந்திப்பு

சென்னை: ஒற்றை தலைமை கோரிக்கை வலுத்து வரும் நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் நேற்று மதியம் திடீரென வந்தார். அங்கு இருந்த கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் எடப்பாடி ஆதரவாளர்களும் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானத்தை சேர்க்கக் கூடாது என எச்சரித்தார். இதற்கிடையில் சேலத்தில் உள்ள எடப்பாடியின் வீட்டில் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.அதிமுகவை வழிநடத்தி செல்ல இனி ஒற்றை தலைமைதான் வேண்டும் என்ற…

அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை : அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்

சென்னை :அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். யாரும் பொதுச்செயலாளராக கட்சியின் சட்டத்தில் இடமில்லை என்றும் வைத்திலிங்கம் குறிப்பிட்டுள்ளார். Source link

ஜூலை – 3 அன்று நாமக்கல்லில் நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு : கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: ஜூலை 3ம் தேதி நாமக்கல்லில் நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு நடைபெறும் என கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘உள்ளாட்சியிலும் நல்லாட்சி’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று, பொறுப்பேற்றுள்ள நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு,கழக முதன்மைச் செயலாளரும் – நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான திரு.…

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிரான மனு : இன்று விசாரணை!!

சென்னை : அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்று விசாரணை நடைபெறுகிறது. அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Source link

மக்கள் மனம் அறிந்து நடக்கிற ஆட்சியே திராவிட மாடல்: அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

பெரம்பூர்: சென்னை வடக்கு மாவட்டம் பெரம்பூர் தெற்கு பகுதி திமுக சார்பில் கலைஞரின் 99வது பிறந்த நாள் மற்றும் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் பெரம்பூர் பழனி ஆண்டவர் கோயில் தெரு அருகே நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. பெரம்பூர் தெற்கு பகுதி செயலாளர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர் முன்னிலை வகித்தார். இந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில், சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இளைய…

1 136 137 138 139 140 161