Browsing: அரசியல்

ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் ஆலோசனை இபிஎஸ் ஆதரவாளர்கள் கூட்டத்தில் ஓபிஎஸ் தரப்பினர் புகுந்து தாக்குதல்: நாற்காலிகள் வீச்சு; கார் கண்ணாடி உடைப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நடந்த இபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் புகுந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். நாற்காலிகள் வீசப்பட்டன. கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இச்சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்தனர்.ராமநாதபுரத்தில், எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமை ஏற்க வலியுறுத்தி, ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்டச் செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் கவிதா சசிகுமார் பேசுகையில், ‘‘முடிவெடுப்பதில் ஓபிஎஸ் தயங்குகிறார். கட்சி வளர்ச்சிக்கு தீர்க்கமான…

சொல்லிட்டாங்க…

பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்திக்க எனக்கு முழு உரிமை உள்ளது. :- காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மாநாட்டில் விளையாட்டை ஊக்குவிக்க தேசிய விளையாட்டு மேம்பாட்டு நிதி உருவாக்கப்பட்டுள்ளது. :- ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்குர்எம்எல்ஏக்களை பாஜ வளைத்தாலும், கட்சித் தொண்டர்களை ஒருபோதும் சிவசேனாவிடம் இருந்து பிரித்து விட முடியாது. :- மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேமருத்துவ கல்வி வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் மாற்றுப் பாட வாய்ப்புகளை ஆராய வேண்டுமே தவிர, தற்கொலை செய்து…

ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே நடந்த மோதலில் இருவருக்கு மண்டை உடைந்தது. ஈபிஎஸ்க்கு ஆதவாக நடந்த செயல் வீரர் கூட்டத்தில் உள்ளே புகுந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. Source link

தேமுதிக உட்கட்சி தேர்தல் மண்டல பொறுப்பாளர்கள் நியமனம்: விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை: தேமுதிக உட்கட்சி தேர்தல் நடத்துவதற்காக மண்டல பொறுப்பாளர்களை விஜயகாந்த் நியமித்துள்ளார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:தேமுதிக அமைப்பு தேர்தல் நடத்துவதற்கு தேமுதிகவின் சட்ட விதிகளின் படி தேர்தல் பணிக்காக மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். அதன்படி கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், அரியலூர், செங்கல்பட்டு மாவட்ட மண்டல பொறுப்பாளராக தேமுதிக அவைத்தலைவர் டாக்டர் வி.இளங்கோவன் நியமிக்கப்படுகிறார். நாமக்கல், திருச்சி, கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, பெரம்பலூர் மாவட்ட…

வருமானத்திற்கு அதிகமாக 500% சொத்துக்கள் குவிப்பு : அதிமுக மாஜி அமைச்சர் காமராஜூக்கு சொந்தமான 49 இடங்களில் சோதனை; லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு!!

சென்னை : அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீது ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அமைச்சர் காமராஜ் மற்றும் வழக்கில் தொடர்புடைய 6 பேர் வருமானத்திற்கு அதிகமாக சுமார் 500%(58.84 கோடி ) சொத்துகள் சேர்த்துள்ளனர். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் , ‘உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை முன்னாள் அமைச்சரும்   நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான காமராஜ் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பாக ஒரு விரிவான…

ஐ.சி.யூ.,வில் இருக்கும் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது: பாஜ தலைவர் அண்ணாமலை பேட்டி

சென்னை: தமிழகத்தில் ஐசியூவில் இருக்கும் காங்கிரஸ் கட்சியால், ஒரு இடத்தில் கூட பெற்றி பெற முடியாது என்று தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று அளித்த பேட்டி: பாஜ ஆட்சியில் தென் மாநிலங்களுக்கு முக்கியத்துவம் தரப்படமாட்டாது என கூறப்பட்டது. இளையராஜா உள்ளிட்ட 4 பேர் ராஜ்யசபா எம்.பி.,க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை, தமிழகத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் வரவேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. கோவையில், தனது பிறந்த நாள் விழாவின் போது, மாநில…

தலைமை கழகத்தை கைப்பேற்றுவேன் என சசிகலா பேச்சு எதிரொலி; அதிமுக அலுவலகத்தில் பாதுகாப்புக்காக ஏராளமானோர் குவிப்பு: குத்தாட்டம் போடும் வீடியோவால் பரபரப்பு

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பேற்றுவேன் என்று சசிகலா கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு குத்தாட்டம் போடும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்னை எழுந்ததை அடுத்து இபிஎஸ், ஓபிஎஸ் இடையே மோதல் உருவானது. இதைத் தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் அதிரடியாக குற்றம் சாட்டி வருகின்றனர். அதே நேரத்தில் பொதுக்குழுவை கூட்டி பொது செயலாளராக எடப்பாடி திட்டமிட்டுள்ளார். இதற்காக வருகிற 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூடும் என்று…

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் ஈபிஎஸ்க்கு சரமாரி கேள்வி: பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் வழக்கை உயர்நீதிமன்றம் நாளை ஒத்திவைத்தது. வரும் 11ம் தேதி நடத்தப்பட உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்துள்ள உச்ச நீதிமன்றம், இந்த பிரச்னையில் நிவாரணம் தேவைப்பட்டால் சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதியை நாடலாம் என ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு உத்தரவிட்டுள்ளது. அதே நேரம், கடந்த மாதம் 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்தும், எடப்பாடி பழனிசாமி தரப்பு மீது தொடரப்பட்ட…

தமிழகத்தை துண்டாடுவோம் நயினார் நாகேந்திரனுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்

சென்னை: தமிழகத்தை துண்டாடுவோம் என்று பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டைப் பாண்டிய நாடு, பல்லவ நாடு என்று இரண்டாகப் பிரிப்போம் என்றும், அதற்கான இடத்தில்தான் நாங்கள் இருக்கிறோம் என்றும் பாஜ சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பாஜவின் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரு மதம், ஒரே…

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் இன்று விசாரணை உச்ச நீதிமன்ற உத்தரவை தாக்கல் செய்ய வேண்டும்: ஓபிஎஸ் தரப்புக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. ஜூலை 11ம் தேதி நடக்க உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவில், கட்சி விதிப்படி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட அதிகாரமுள்ளது. வேறு…

1 126 127 128 129 130 161