Browsing: அரசியல்

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் சென்னையில் இன்று மாலை அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் சென்னையில் இன்று மாலை அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை எதிர்கட்சித் துணைத் தலைவராக தேர்வு செய்ய வாய்ப்பு எனக் கூறப்படுகிறது. Source link

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. நாளை நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. Source link

அதிமுக ஊழல் பெருச்சாளிகளை கோட்டைக்குள் இனிமேல் மக்கள் நுழையவிட மாட்டார்கள்: எடப்பாடிக்கு டி.ஆர்.பாலு எம்பி பதிலடி

சென்னை: ‘‘கோட்டைக்குள் இனிமேல் அதிமுக ஊழல் பெருச்சாளிகளை மக்கள் நுழைய விட மாட்டார்கள்” என்று எடப்பாடிக்கு டி.ஆர்.பாலு எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. நேற்று வெளியிட்ட அறிக்கை: சொந்தக் கட்சிக்குள்ளேயே தனக்கு ஆதரவு தேடி ஊர் ஊராக அலையும் பழனிசாமி, முதல்வராக இருந்த போது கொள்ளையடித்த பணத்தில் கூட்டத்தைத் திரட்டி வைத்துக் கொண்டு, “இந்தக் கூட்டத்தைப் பார்க்கும்போது, அதிமுக வெற்றி பெறுவதற்கான அச்சாரம் போடப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை வீழ்த்த…

வெளியே தலைகாட்ட முடியாத நிலை ஏற்படும் ஓபிஎஸ் என்னை மிரட்டினால் பல உண்மைகளை வெளியிடுவேன்: எச்சரிக்கை விடுத்து மாஜி அமைச்சர் உதயகுமார் வீடியோ

திருமங்கலம்: என்னை மிரட்டினால் ஓபிஎஸ் குறித்த பல உண்மைகளை வெளியிடுவேன் என முன்னாள் அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான உதயகுமார் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோவில் அவர் பேசியதாவது: நான் 2008ல் அதிமுகவில் சேர்ந்ததாக ஓபிஎஸ்சின் கைக்கூலியான கோவை செல்வராஜ் அவதூறாக பேசி இருக்கிறார். அதிமுகவின் வரலாறு தெரியாத கோவை செல்வராஜ் போன்றவர்களை…

கே.எஸ்.அழகிரி பேட்டி 3 நாள் பயணமாக ராகுல் காந்தி தமிழகம் வருகை

சென்னை:  தமிழக காங்கிரஸ் சார்பில் காமராஜரின் 120வது பிறந்த நாள் விழா சத்தியமூர்த்திபவனில் நேற்று கொண்டாடப்பட்டது. வளாகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து முன்னாள் தலைவர்கள் ஈவிகேஎஸ்.இளங்கோவன், தங்கபாலு, துணைத் தலைவர்கள் கோபண்ணா, பொன் கிருஷ்ணமூர்த்தி, கீழானூர் ராஜேந்திரன், முருகானந்தம், செல்வப்பெருந்தகை எம்எல்ஏ, எஸ்சி பிரிவு தலைவர் ரஞ்சன்குமார் உட்பட ஏராளமானோர் மரியாதை செலுத்தினர். அப்போது கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:  சோனியா காந்திக்கு, அமலாக்கத்துறையில்…

அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை திமுக அரசு திறந்து வைப்பதாக பேசிய எடப்பாடி பழனிச்சாமிக்கு டி.ஆர்.பாலு கண்டனம்

சென்னை: அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களைத்தான் திமுக அரசு திறந்து வைப்பதாக பேசிய எடப்பாடி பழனிச்சாமிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு அறிக்கை தக்கல் செய்துள்ளார். முந்தைய ஆட்சியில் கிடப்பில் போட்ட திட்டங்களை நிறைவேற்றி மக்களுக்கு திமுக அரசு பலன் தரச்செய்து கொண்டிருக்கிறது என அவர் கூறியுள்ளார். Source link

அதிமுக தலைமை அலுவலகம் முன் கலவரம் நடந்த விவகாரம் பிரச்னை முடியும்வரை அலுவலகம் பூட்டியே இருக்க வேண்டும்: ஐகோர்ட்டில் ஓபிஎஸ் தரப்பு வாதம்

சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் தொடர்பான பிரச்னை முடியும்வரை அலுவலகம் பூட்டியே இருக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி நடந்த கலவரத்தை தொடர்ந்து தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள்…

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மேலும் 21 பேர் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மேலும் 21 பேரை எடப்பாடி பழனிசாமி நீக்கி நேற்று அறிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுகவின் கொள்கைகளுக்கும், குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் சுப்புரத்தினம் (அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர்), மாறன் (ஜெயலலிதா பேரவை துணை செயலாளர்), சிவில் ஆ.முருகேசன் (இலக்கிய அணி துணை செயலாளர்)…

எடப்பாடிக்கு விடை கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.. ஒன்றரை கோடி உண்மை தொண்டர்களே ஒன்றிணைவோம் : ஓபிஎஸ் மகன்

சென்னை: கொள்கை முடிவு எடுத்ததினால் அமைதியாக இருக்கிறேன் என்று வி.ப.ஜெயபிரதீப் எச்சரித்திருந்த நிலையில், எடப்பாடிக்கு விடை கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று ஓபி ரவீந்திரநாத் எம்.பி. தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஓபிஎஸ் மகன்கள் உள்ளிட்ட 18 அதிமுக நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி நீக்கி நேற்று அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.தனது மகன்கள் நீக்கப்பட்டதற்கு, ’’கட்சி சட்டவிதிகளின் படி எடப்பாடி பழனிசாமியின் எந்த அறிவிப்பும் செல்லாது. உண்மையான அதிமுக நாங்கள்தான்.  எங்களை அவர்கள் நீக்கியது செல்லாது.…

எனக்கு வழக்குகள் இல்லை; உங்களுக்குத்தான் வாக்கி டாக்கி வழக்கு இருக்கிறது.. தயாராக இருங்கள் : ஜெயக்குமாருக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி

சென்னை: எனக்கு வழக்குகள் இல்லை; உங்களுக்குத்தான் வாக்கி டாக்கி வழக்கு இருக்கிறது என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமாருக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”அமைச்சர் ஜெயக்குமார், நான் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு தெம்பில்லாமல் – திராணியில்லாமல், என்னுடைய கேள்விகளுக்கு தொடர்பில்லாமல் பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு என்ன விலை? என்ற பழமொழிக்கேற்பவும் – பந்ததை உதைப்பதற்கு பதிலாக, ஆளை உதைப்பதாக சம்பந்தா சம்பந்தமில்லாமல் -…

1 122 123 124 125 126 161