Browsing: அரசியல்

மின்கட்டண உயர்வை கண்டித்து 25ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

சென்னை: மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 25ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அனைத்து மாவட்ட தலைநகரங்களில் வரும் 25ம் தேதி காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Source link

இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்: திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மடல்

சென்னை: இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அண்ணா வழியில் அயராது உழைப்போம்; ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம். வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்; மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதே திராவிட மாடலின் இலக்கணம் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார். Source link

அரிசிக்கும் ஜிஎஸ்டி வரியா? ஒன்றிய அரசுக்கு மநீம கண்டனம்

சென்னை: கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கை: ஏழை எளிய, நடுத்தர மக்களின் உணவான அரிசிக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதித்துள்ளது ஒன்றிய அரசு. அதுபோல், பொட்டலங்களில் அடைத்து விற்கப்படும் அத்தியாவசிய பொருட்களுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. புதிய வரியால் அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரிக்கும். ஏற்கனவே கடும் விலைவாசி உயர்வால் பரிதவிக்கும் பொதுமக்கள் மேலும் சிரமப்படுவார்கள். நீட் தேர்வை முன்வைத்து அரசியல் செய்யாமல், இதற்கு நிரந்தர…

அரிசி அரசியல்… – Dinakaran

வரும் நவம்பர் 15ல் உலக மக்கள் தொகை 800 கோடியை எட்டுமென ஐ.நா சபை தெரிவித்துள்ளது. இது, வெறும் தகவல் மட்டுமல்ல… ஒரு வகையில் எச்சரிக்கை அறிவிப்பும் கூட. இந்தியாவை பொறுத்தவரை தற்போதைய  மக்கள் தொகை 141 கோடியை தாண்டி உள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 200 கோடியை எட்டுமென கருதப்படுகிறது. இந்தியாவில் தீவிர வறுமையில் சுமார் 73 கோடி பேர் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, மொத்த மக்கள்தொகையில் 45 சதவீதத்திற்கு…

சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி ஆலோசனை: பாஜ எம்எல்ஏக்களும் பங்கேற்றதால் பரபரப்பு

சென்னை: சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி  நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பாஜ எம்எல்ஏக்களும் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இத்தேர்தலில் பாஜ கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். அவருக்கு அதிமுகவில் எடப்பாடி அணியினர், ஓபிஎஸ் அணியினரும் தனித்தனியாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெற உள்ளது.இந்த சூழலில் அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் 17ம்…

மக்களின் அன்பாலும், மருத்துவர்களின் கனிவாலும் மக்கள் பணிகளை தொடர இருக்கிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்

சென்னை: மக்களின் அன்பாலும், மருத்துவர்களின் கனிவாலும் நலமுடன் மக்கள் பணிகளை தொடர இருக்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: கொரோனா தொற்றினால் நான் பாதிக்கப்பட்ட செய்தி அறிந்ததிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் என்னைத் தொடர்பு கொண்டும், கடிதம் எழுதியும் நலம் பெற வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நலமடைந்துவிட்டேன் என்ற நல்ல செய்தியுடன் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். தோழமைக் கட்சித்…

குடியரசுத் தலைவர் தேர்தல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 10 மணி அளவில் வாக்களிக்க திட்டம்

சென்னை :குடியரசுத் தலைவர் தேர்தலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 10 மணி அளவில் வாக்களிக்க திட்டமிட்டுள்ளார். கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதும், தலைமை செயலகம் சென்று வாக்களிக்க உள்ளார். Source link

சமூக விரோதிகளின் கைவரிசை: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

திண்டுக்கல்: கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து வன்முறையாக மாற்றி உள்ளார்கள் என, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி திண்டுக்கல்லில் நேற்று அளித்த பேட்டி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மாணவி மரணம் சம்பவத்தில் காவல்துறை முழுமையான விசாரணைக்கு பிறகுதான் தெளிவாக தெரியவரும். அந்த சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் கிராமத்தினர் கொஞ்சம் எழுச்சி அடைந்ததை குற்றம் என்று சொல்ல முடியாது. அவர்கள் கோபப்பட்டு உள்ளார்கள். அதை…

சமூகவிரோதிகள் காரணமா என கண்டறிந்து கடும் நடவடிக்கை: பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

பெரம்பலூர்: சின்னசேலம் பள்ளியில் இறந்த மாணவியின் பெற்றோர் பெரம்பலூர் மாவட்ட அரசுத் தலைமை  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: மாணவியின் சாவு குறித்து சிபிசிஐடிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இருந்தும் தமிழக அரசு முறைப்படி நீதி விசாரணை நடத்த வேண்டும். கலவரத்திற்கு சமூக விரோதிகள் காரணமா என கண்டறிந்து அவர்கள்மீது நடவடிக்கை வேண்டும் என்றார். Source link

12ம் வகுப்பு மாணவி மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை

சென்னை: பள்ளி நிர்வாகிகளை கைது செய்து கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பயின்று வந்த கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி இரு தினங்களுக்கு முன்பு மர்மமான முறையில்…

1 121 122 123 124 125 161