Browsing: அரசியல்

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் ஆதரவாளர்கள் மோதலால் சீல்வைக்கப்பட்ட அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: சீலிடப்பட்ட அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் தர வேண்டும் என்றும் பாதுகாப்பு கருதி ஒரு மாத காலத்துக்கு கட்சி தொண்டர்கள் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு செல்லக்கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர்.இந்த கலவரத்தை தொடர்ந்து தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.இந்த உத்தரவை எதிர்த்து அதிமுக கட்சியின்…

சமூகநீதியை வெல்ல ஒன்றுபட்டு உறுதியேற்போம்: தொண்டர்களுக்கு ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை: சமூக நீதியை வென்றெடுக்க ஒன்றுபட்டு உறுதியேற்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்: தமிழ்நாட்டில் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள வன்னியர் சமூகத்தை கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் முன்னேற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் தொடங்கப்பட்ட வன்னியர் சங்கம் 42 ஆண்டுகளை நிறைவு செய்து, 43வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதனடிப்படையில் போதிய புள்ளிவிவரங்களுடன் 10.50 சதவீத இட ஒதுக்கீட்டு சட்டத்தை மீண்டும் நிறைவேற்ற…

10 நாட்களுக்கு பிறகு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம் : ஈபிஎஸ் தரப்பிடம் சாவி ஒப்படைப்பு!!

சென்னை: 10 நாட்களுக்கு பிறகு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர்.இந்த கலவரத்தை தொடர்ந்து தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.இந்த உத்தரவை எதிர்த்து அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.இந்த…

உதயகுமாருக்கு துணைத்தலைவர் பதவி வழங்கியது ஏன்?..செல்லூர் ராஜூ புது விளக்கம்

மதுரை: அதிமுக சட்டமன்ற துணைத்தலைவர் பதவியை, உதயகுமாருக்கு வழங்கியது ஏன் என்பது குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் நேற்று அளித்த பேட்டி:எடப்பாடி பழனிசாமியை கட்சியின் தொண்டர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டோம். இதனால் தான் அவரை இடைக்கால பொதுச்செயலாளராக நியமித்துள்ளோம். அதிமுக சட்டமன்ற துணைத்தலைவராக இருந்தவரை (ஓபிஎஸ்) நீக்கும்போது, அவர் சார்ந்த அதே சமூகத்தை சேர்ந்தவருக்கு பொறுப்பு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் உதயகுமாருக்கு துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம்…

அரசியல் ஆண்மை உள்ள யாராயினும் பொதுச்செயலாளருக்கு போட்டியிடலாம்: திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

திண்டுக்கல்: அரசியல் ஆண்மை உள்ளவர்கள் யாராக இருந்தாலும், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடலாமென திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.திண்டுக்கல்லில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது :அதிமுகவில் மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க முடியாது. தொண்டர்கள் தான் தேர்ந்தெடுக்க முடியும் என எம்ஜிஆர் சட்ட திருத்தம் செய்திருந்தார். அதேபோல் தான் தற்போது உள்ள இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்ட திருத்தம் செய்துள்ளார். இன்னும்…

அதிமுக அலுவலக உரிமை அலுவலக உரிமை தொடர்பாக ஆராயாமல் பிறப்பிக்கப்பட்டுள்ளது: ஓபிஎஸ் தரப்பு

சென்னை: அதிமுக அலுவலக உரிமை அலுவலக உரிமை தொடர்பாக ஆராயாமல் பிறப்பிக்கப்பட்டுள்ளது என ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் திருமாறன் தெரிவித்துள்ளார். ஆர்.டி.ஓ உத்தரவை நேரடியாக ரத்து செய்தது தவறு. இந்த வழக்கின் உத்தரவு மேல்முறையீடு செய்ய தகுந்தது. உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியும் எனவும் கூறினார். Source link

ஈபிஎஸ் வசமாகிறது அதிமுக தலைமை அலுவலகம்: ஓபிஎஸ்க்கு பின்னடைவு

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து அதிமுக தலைமை அலுவலகம் எடப்பாடி பழனிசாமி வசமாகிறது. உயர்நீதிமன்ற உத்தரவால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. Source link

23ல் பாஜ ஆர்ப்பாட்டம்: அண்ணாமலை பேட்டி

சேலம்: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை சேலத்தில் நேற்று அளித்த பேட்டி: ஒன்றிய அரசின் வற்புறுத்தல் காரணமாக மின்சார கட்டணத்தை உயர்த்தியதாக மின்சாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். ஆனால் ஒன்றிய அரசு அவ்வாறு கூறவில்லை. ஏற்றவுள்ள மின் கட்டணத்தை உடனடியாக திரும்ப பெறாவிட்டால் வருகிற 23ம்தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பாஜ சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார். Source link

பாஜ கண்டன ஆர்ப்பாட்டம் – Dinakaran

திருவள்ளூர்: பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் சாதி ரீதியிலான கேள்வியை எழுப்பியதை கண்டித்து பாஜ பட்டியல் அணி சார்பில் திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பட்டியல் அணி மாவட்ட தலைவர் சந்தோஷ் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர்கள் திரவியம் பாலா, லஷ்மிகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டியல் அணி மாநில செயலாளர் செந்தில் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாவட்ட தலைவர் அஸ்வின் (எ) ராஜசிம்ம மகேந்திரா கண்டன உரையாற்றினார். இதில்…

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு ஆக.2க்கு ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த வழக்கு ஆக.2க்கு ஒத்திவைக்கப்பட்டது. சண்முகம் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஆக.2க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. Source link

1 120 121 122 123 124 161