Browsing: அரசியல்

போர்க்களம் போல் காட்சியளிக்கும் அதிமுக தலைமை அலுவலகம்: ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதலால் பரபரப்பு

சென்னை: சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்கியதில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. Source link

வெற்றியை நோக்கிய பயணத்தை விரைவுபடுத்துவோம்: ராமதாஸ் கடிதம்

சென்னை: பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டு அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாகவும், மக்களுக்கான உரிமைகளை வென்றெடுத்துக் கொடுப்பதை முழு நேரப் பணியாகவும் கொண்டிருக்கும் கட்சியாகவும் திகழும் பா.ம.க, வரும் 16ம் தேதி 33 ஆண்டுகளை நிறைவு செய்து 34வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வரலாற்று சிறப்பு மிக்கத் தருணத்தில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் முதன்மை நோக்கம் என்பது ஆட்சியைக் கைப்பற்றுவதும், அதன் மூலம் கிடைக்கும் அதிகாரத்தின்…

அதிமுக பொதுக்குழுவின் வரவேற்புக்காக வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிப்பு

சென்னை: சென்னை வானகரத்தில் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவின் வரவேற்புக்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களை மர்மநபர்கள் கிழித்துச் சென்றுள்ளனர். ஜெயலலிதா, பேரறிஞர் அண்ணா, முன்னால அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் உருவப்படம் பதித்த பேனர் கிழிக்கப்பட்டுள்ளது. Source link

அதிமுக பொதுக்குழு நாளை நடைபெறுமா?: ஆதரவாளர்களுடன் எடப்பாடி அவசர ஆலோசனை

சென்னை: எடப்பாடி தரப்பு கூட்டியுள்ள அதிமுக பொதுக்குழு நாளை நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் இன்று காலை அவர் சென்னை கிரீன்வேஸ் சாலை வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அதிமுகவில் திடீரென ஒற்றை தலைமை பிரச்னை எழுந்தது. இதைத் தொடர்ந்து ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் போக்கு உருவானது. தற்போது இந்த மோதல் போக்கு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 2 பேரும் யாருக்கு கட்சியில் பலம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் பணியில் ஈடுபட்டனர்.அதில் பெரும்பான்மையினரின்…

ஒற்றை தலைமை விவகாரத்தில் மோதல் போக்கு விஸ்வரூபம் அதிமுகவை சுயநலத்துக்காக ஓபிஎஸ் அழிக்க பார்க்கிறார்: தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு புகார்

சென்னை: அதிமுகவை சுயநலத்துக்காக ஓபிஎஸ் அழிக்க பார்க்கிறார் என்று தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. 40 பக்க மனுவில் ஓபிஎஸ் குறித்து சரமாரி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்னை எழுந்ததில் இருந்து ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் போக்கு உருவானது. தற்போது இந்த மோதல் போக்கு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதிமுகவை கைப்பற்றும் வகையில் 2 பேரும் தனித்தனியாக உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்துக்கு சென்று வழக்கு தொடுத்து வருகின்றனர்.…

திருச்சி அருகே சுங்கச்சாவடியில் ஆதரவாளர்களுடன் சசிகலா திடீர் மறியல்: பழிவாங்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

திருச்சி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா விழுப்புரத்தில் இருந்து திருச்சி வழியாக தஞ்சைக்கு காரில் நேற்றிரவு சென்றார். திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இரவு 11.45 மணிக்கு சென்றார். சசிகலாவுடன் ஆதரவாளர்கள் 4 கார்களில் முன்னும், பின்னும் சென்றனர். திருச்சி மாவட்டம் துவாக்குடி சுங்கச்சாவடியை கடந்து சசிகலாவின் ஆதரவாளர்களின் ஒரு கார் சென்றது. அதன்பிறகு சசிகலா கார் சென்றது. அப்போது சசிகலாவின் கார் கண்ணாடியில் சுங்கச்சாவடி ஸ்கேன் ஸ்டிக் மோதியது. இதனால்…

சொல்லிட்டாங்க…

நாங்கள் மதத்தை வைத்து கட்சி நடத்தவில்லை. கட்சியானாலும், ஆட்சியானாலும் மக்கள் முன் நின்று ஆட்சி நடத்துறோம். கட்சி நடத்துகிறோம்.- முதல்வர் மு.க.ஸ்டாலின்காஸ் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஜிஎஸ்டி உள்ளிட்ட எல்லா பிரச்னைகளையும் உருவாக்கியவர் பிரதமர் மோடிதான் என்கின்றனர் மக்கள்.- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திஇந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்படும்.- ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிபுதுவையில் இரட்டை ஆட்சி எதுவும் நடைபெறவில்லை. மக்களின் வளர்ச்சிக்காக கவர்னர், முதல்வர் என அனைவரும் இணைந்து…

காமராஜுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டுக்கு காரணம் யார்?.. ஓபிஎஸ் மீது பொய் பிரசாரத்தை கிளப்பி விடும் அதிமுக ஐடி விங்க்: எடப்பாடி அணியினரின் உண்மை வெளியானதால் பரபரப்பு

சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் காமராஜுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடப்பதற்கு ஓபிஎஸ்தான் காரணம் என்று, அதிமுக ஐடி விங்க் மற்றும் எடப்பாடி ஆதரவாளர்களும் பொய் பிரசாரத்தை கிளப்பிவிடும் தகவல் ஆதாரத்துடன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கையை வலியுறுத்தி எடப்பாடி அணியினர் தொடர்ந்து போர்க்கொடி எழுப்பி வருகிறார்கள். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் அணியினர், இரட்டை தலைமை முறையே போதுமானது என்று கூறி வருகின்றனர். இதனால் எடப்பாடி – ஓபிஎஸ் அணியினர் இடையே கடந்த ஒரு…

நாளை மறுநாள் எடப்பாடி தரப்பு கூட்டியுள்ள அதிமுக பொதுக்குழு நடைபெறுமா?.. பொதுக்குழு உறுப்பினர்கள் நாளைக்குள் சென்னை வர உத்தரவு

* மாவட்டச் செயலாளர்களுக்கு கவனிப்புசென்னை: வருகிற 11ம் தேதி எடப்பாடி தரப்பு கூட்டியுள்ள அதிமுக பொதுக்குழு நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் நாளைக்குள் சென்னை வர எடப்பாடி தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டச் செயலாளர்களுக்கு தலா ‘ஒரு ஸ்வீட் பாக்ஸ்’ வழங்கப்பட்டுள்ளன. அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்னை எழுந்ததில் இருந்து ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் போக்கு உருவானது. தற்போது இந்த மோதல் போக்கு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டு…

சீனாவில் இருந்து தேசியக்கொடி இறக்குமதி காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அஜய் குமார் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் வருமாறு: கிழக்கு லடாக் எல்லையில் சீன ராணுவம் புதிதாக நமது ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ள நிலையில், அந்த நாட்டிடம் இருந்து இந்திய தேசியக்கொடிகளை இறக்குமதி செய்ய மோடி அரசு கதவுகளை திறந்து விட்டுள்ளது.பிரதமர் மோடி காதி நிறுவனத்தின் பாதுகாவலாக தன்னை காட்டி கொள்ளவே, கடந்தாண்டு மன் கி பாத் உரையில் காதி பொருட்களையே வாங்கும்படி மக்களை கேட்டு கொண்டார்.…

1 125 126 127 128 129 161