Browsing: அரசியல்

தேமுதிக உட்கட்சி அமைப்பு தேர்தல்: விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை: தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தேமுதிக தேர்தல் பணிக்குழுவினர் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கு தேர்தல் நடத்தும் ஆணையாளராக நியமிக்கப்படுகிறார்கள். தேமுதிக அமைப்பு தேர்தல் குக்கிராமங்களில் உள்ள ஒன்றிய ஊராட்சி வாரியாக பூத் கிளை கழகங்கள் தொடங்கி, ஊராட்சி, பேரூர் வார்டு, நகர வார்டு என அனைத்து கழக அமைப்புகளுக்கும் 4 கட்டங்களாக தமிழகம் முழுவதும் தேமுதிக  அமைப்பு தேர்தல் நடைபெறும். இந்த தேர்தல் வரும் 10ம்தேதி தொடங்கி 24ம்தேதி என…

இரட்டை இலைச் சின்னத்தை முடக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு: நாளை விசாரணை..!

சென்னை: இரட்டை இலைச் சின்னத்தை முடக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை பிடிப்பதில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தனித்தனி கோஷ்டியுடன் மோதி வருகின்றனர். இருவரும் நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், வருகிற 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி கூட்டியுள்ள பொதுக்குழு நடக்குமா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரட்டை இலைச் சின்னத்தை முடக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி அதிமுக முன்னாள் உறுப்பினரும், ஜெ.ஜெ. கட்சியின் நிறுவனராகவும்…

அரசியலில் இருந்து ஜாதிக்கு மாறினர்: சேலத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக பரபரப்பு போஸ்டர்

சேலம்: அதிமுகவில் மோதல் முற்றியுள்ள நிலையில் அரசியலை வைத்து போஸ்டர் ஒட்டப்பட்டு வந்த நிலையில், சேலத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக ஜாதியை குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை பிடிப்பதில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தனித்தனி கோஷ்டியுடன் மோதி வருகின்றனர். இருவரும் நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், வருகிற 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி கூட்டியுள்ள பொதுக்குழு நடக்குமா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக இரு கோஷ்டியை சேர்ந்தவர்களும் போஸ்டர் யுத்தத்தில்…

உயர்நீதிமன்ற அதிகாரத்தில் தலையிட முடியாது: உச்சநீதிமன்ற நீதிபதிகள்

டெல்லி: அதிமுக உட்கட்சி விவகாரங்களை பொதுக்குழுவில் தீர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற அதிகாரத்தில் தலையிட முடியாது எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஜூன் 23-ம் தேதியே பொதுக்குழு நடந்து முடிந்த நிலையில் இப்போது ஏன் முறையீடு என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். Source link

சொல்லிட்டாங்க…

* பள்ளி, கல்லூரிகள், மாணவர்களுக்கு அறிவாற்றலையும் தனித்திறமையையும் உருவாக்கும் அடிப்படையில் இயங்க வேண்டும். – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்* தென் மாநிலங்களில் பாஜ ஆட்சியை கொண்டுவரும் விஷன் தெற்கு என்ற திட்டம் ஏமாற்று வித்தை. தென் மாநிலங்களில் எடுபடாது. – கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி* பொருளாதாரத்தில் நிலைகுலைந்த இலங்கைக்கு இந்தியா வாரிவாரி வழங்கியபோதும் சிங்கள அரசு, இந்திய மீனவர்களை வேட்டையாடுகிறது. – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ* பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான தண்டனை உடனடியாக வழங்கப்பட…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாஜ போராட்டம்: சென்னையில் அண்ணாமலை பங்கேற்பு

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாஜ சார்பில் நேற்று உண்ணாவிரத  போராட்டம் நடந்தது. சென்னையில் நடந்த போராட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பல்வேறு ேகாரிக்கைகளை வலியுறுத்தி தமிழக பாஜ சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு பாஜ தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாநில…

பாஜக தலைமையகத்தை முற்றுகையிடுவோம்: சிவசேனா எச்சரிக்கை

ஆலந்தூர்: சிவசேனா கட்சியின் தமிழ்நாடு மாநில மைய குழு கூட்டம் மடிப்பாக்கத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்;ஒன்றிய அரசின் அமைப்புகளான அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ போன்ற அமைப்புகளை வைத்து சிவசேனா கட்சியை பழிவாங்கும் நோக்கில் தொடர்ந்து தொல்லை கொடுத்துவந்தால் பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தை  முற்றுகையிடுவோம். சுதந்திர தினத்தன்று சென்னை முதல் குமரி வரை சிவசேனா பாதயாத்திரை நடத்தப்படும். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. Source link

வருகிற 11-ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் பொதுச் செயலாளரை தொண்டர்கள் மூலம் தேர்வு செய்ய தீர்மானம்; எடப்பாடி முயற்சியை, சட்டப்பூர்வமாக முறியடிக்க பன்னீர்செல்வம் திட்டம்

சென்னை: மேலூர் கொட்டாம்பட்டி அருகே இளம்பெண்ணின் பாதி எரிந்த சடலம் போலீசாரால் மீட்கப்பட்ட வழக்கில், அவரை எரித்து கொன்றது 3வது திருமணம் செய்த அவரது கணவர், மாமியார், மாமனார் மற்றும் உறவினர்கள் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே பொட்டப்பட்டியில் குன்றக்குடி ஆதீன மடத்திற்கு சொந்தமான தென்னந்தோப்பில் கடந்த 29ம் தேதி, சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் உடல் பாதி எரிந்த…

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராகிறார் எடப்பாடி பழனிசாமி : ஜெயலலிதாவுக்கு நிகராக பழனிசாமிக்கு அதிகாரம் வழங்க திட்டம்!!

சென்னை : அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளார் தேர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.வானகரத்தில் கடந்த ஜூன் 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு பூதாகரமாக வெடித்தது. இக்கூட்டத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் கொடுத்த 23 தீர்மானங்களை பெரும்பாலான…

பெரியார், அண்ணா, கலைஞர் போட்ட விதைதான் தமிழகம் முன்னணி மாநிலமாக இருக்க காரணம்: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பேச்சு

சென்னை: இந்தியாவில் தமிழகம் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னணியில் இருப்பதற்கு காரணம் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் போட்ட விதைதான் என்று சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் அடங்கிய 5 அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவ, மாணவிகளுக்காக முப்பரிமாண பகிர்வு மெய்நிகர் கல்வி ஆய்வகத்தின் தொடக்க விழா, வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் கல்லூரியில் நேற்று நடந்தது. அதில்,…

1 127 128 129 130 131 161