Browsing: செய்திகள்

கோவை திமுக வேட்பாளர் தேர்வில் சப்ரைஸ்.. செந்தில் பாலாஜியால் ஷாக்கான உடன்பிறப்புகள் | Senthil Balaji plan on Coimbatore DMK candidate selection

சில நிர்வாகிகள் 2-3 தொகுதிகளுக்கு விருப்ப மனுக்கள் கொடுத்துள்ளனர். ஆனால் ஒரு தொகுதிக்கான நேர்காணலில் மட்டும் பங்கேற்க வேண்டும் என்று கூறியதால், கடைசி நேரத்தில் பல நிர்வாகிகள் நேர்காணல்களில் மாறி மாறி அமர்ந்துள்ளனர்.வேட்பாளர் நேர்காணல்இன்னும் ஒரு வாரத்தில் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கவுள்ள நிலையில்,  திமுகவில் இப்போதுவரை வேட்பாளர்கள் யார் என்று உடன்பிறப்புகளே அறிய முடியாதளவுக்கு சஸ்பென்ஸ் நிலவுகிறது.திமுக கூட்டணியில் காங்கிரஸ், கொமதேக, சிபிஎம், சிபிஐ, தேமுதிக, மநீம, ஆதி தமிழர் பேரவை உள்ளிட்டோர் கோவையில் சீட் எதிர்பார்க்கிறார்கள்.…

இரான் மின் நிலையங்கள் மீதான தாக்குதலை 5 நாட்கள் நிறுத்துவதாக டிரம்ப் அறிவிப்பு – இரான் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images23 மார்ச் 2026, 11:52 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்மத்திய கிழக்கில் நிலவும் மோதலுக்கு ஒரு ‘முழுமையான தீர்வு’ காண்பது குறித்து இரானுடன் ‘பயனுள்ள பேச்சுவார்த்தை’ நடைபெற்றுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.இரானிய மின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு ஒத்திவைக்கப்போவதாக அவர் கூறியுள்ளார்.ட்ரூத் சோஷியல் தளத்தில், வெளியிட்ட ஒரு பதிவில், “அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே, கடந்த இரண்டு நாட்களாக,…

தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் பாஜக முத்திரை! – வலுக்கும் கண்டனங்கள் |election commision letter with bjp stamp issue

கேரளாவில் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து வெளியான ஒரு அறிக்கையில் பாஜகவின் முத்திரை பதிக்கப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனம் செய்த நிலையில், தேர்தல் ஆணையம் இதை வெறும் அலுவலக கவனக்குறைவு (clerical error) என்று விளக்கியுள்ளது.2019-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வேட்பாளர்களின் குற்றப் பின்னணி தொடர்பான வழிகாட்டுதல்கள் குறித்து விளக்கம் கோரி, பாஜக கேரளா அலுவலக தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது. இதற்குப் பதிலாக தேர்தல் ஆணையம் கேரளாவில் உள்ள அரசியல்…

“இந்தியாவுக்கு எதிர்பாராத சவால்கள்” – மத்திய கிழக்கு மோதல் குறித்து பிரதமர் மோதி கூறியது என்ன?

பட மூலாதாரம், EPA/Shutterstock நியூயார்க்கின் லா கார்டியா (LaGuardia) விமான நிலையத்தில், ஒரு விமானம் லாரி ஒன்றுடன் மோதியதில், விமானிகள் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்தனர். “ஏர் கனடா (Air Canada) நிறுவனத்திற்குச் சொந்தமான அந்த விமானம், 72 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்களை ஏற்றிச் சென்றது,” என்று விமான நிலைய ஆணையத்தின் நிர்வாக இயக்குனர் கேத்தரின் கார்சியா ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். “41 பயணிகள் மற்றும் பணிக்குழு உறுப்பினர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.…

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஊராட்சி ஆவணங்கள் திருட்டு; முன்னாள் ஊராட்சி செயலர் மீது வழக்கு! – நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் பிள்ளையார் குளம் ஊராட்சிக்குட்பட்ட வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் அம்மையப்பன். இவர், இந்த ஊராட்சியின் வரவு செலவு விவரங்கள், கடந்த 2023 அக்டோபர் 2-ம் தேதி நடந்த கிராமசபைக் கூட்டத்தில் பற்றாளர் அறிக்கை நகல், பிள்ளையார்குளம் ஊராட்சியில் 2020 முதல் 2023 வரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் வரவு செலவு விவரங்கள் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 3 மனுக்கள் அளித்திருந்தார். இந்த மனுக்களுக்கு பொது தகவல் அலுவலர்…

அரிதான ஆசனவாய் புற்றுநோய் பாதித்த பெண் சிகிச்சை முடிந்து 6 ஆண்டுக்கு பிறகு எப்படி இருக்கிறார்?

பட மூலாதாரம், Trish Prosserபடக்குறிப்பு, சிகிச்சையின் காரணமாக தனது பிறப்புறுப்பின் சுவர்கள் மூடிக்கொண்டதாக திரிஷ் கூறினார்.கட்டுரை தகவல்ஆசனவாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், கதிரியக்க சிகிச்சைக்குப் பிறகு ஏற்பட்ட தாங்க முடியாத வலியால், தான் இறந்து போய்விடுவோம் என நினைத்ததாக கூறுகிறார்.57 வயதான திரிஷ் ப்ரோசெரின் தன்னுடைய பெண்ணுறுப்பின் உட்புறச் சுவர்கள் மூடிவிட்டதாகவும் ஆறு ஆண்டுகள் கழித்தும் தான் இன்னும் வலியுடன் போராடிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.நான்கு குழந்தைகளின் தாயான அவர், தனக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோயின் வகை குறித்து தன்னுடைய…

'கூலர்ஸோடு பேட்டிங் ஆடிய பிராவோ; ஜாலி தோனி; சின்ன தல ரிட்டன்ஸ்!' – சேப்பாக்கத்தில் CSK கொண்டாட்டம்!

‘Roar 26’ சி.எஸ்.கே ரசிகர்களுக்காக அணி நிர்வாகம் ஒரு சிறப்பு நிகழ்வை சேப்பாக்கத்தில் ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்வில் சென்னை அணியின் முன்னாள் ‘OG’ வீரர்கள் ஒரு அணியாகவும், இப்போதைய வீரர்கள் ஓர் அணியாகவும் திரண்டு ஒரு போட்டியில் ஆடியிருந்தனர்.Dhoni with CSK OG Teamபோட்டியின் விதிமுறைப்படி OG வீரர்கள் பேட்டிங் ஆட வேண்டும். தற்போதைய வீரர்கள் பௌலிங் செய்ய வேண்டும். ஆளுக்கு ஒரு ஓவர். விதிமுறைகள் இப்படி இருந்தாலும், இது ஜாலியான சேலஞ்ச் என்பதால் இதையெல்லாம்…

திமுக கூட்டணியில் இருந்து விலகிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி – தேர்தலுக்கான திட்டம் என்ன?

பட மூலாதாரம், Velmurugan.T/Facebookகட்டுரை தகவல்’அரசியல் செயல்பாடுகளிலும் அதிகாரிகளின் ஆதிக்கம் நிறைந்துள்ளது’ என திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்ஆனால் ‘கூட்டணியில் இருந்து போக வேண்டும் என முடிவு செய்த பின் காரணங்களை தேடி பிடித்து சொல்லியிருக்கிறார்’ என திமுகவின் ஆர்.எஸ் பாரதி விளக்கமளித்துள்ளார்.அதேநேரத்தில் “வேல்முருகன் அரசியல் எதார்த்தங்களை புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்” என மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்…

பெண் டாக்டர் கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை; மனநோயாளி போன்று நடித்தவர் சிக்கியது எப்படி?

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை நெடும்பனை பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் குடவட்டூர் பகுதியைச் சேர்ந்த சந்தீப்(44). மதுவுக்கு அடிமையான காரணத்தால் ஆசிரியர் பணியில் இருந்து அவர் நீக்கப்பட்டிருந்தார். இதற்கிடையே ஒரு அடிதடி வழக்கில் சிக்கிய சந்தீப்பை 2023-ம் ஆண்டு மே மாதம் 9-ம் தேதி இரவு  போலீஸார் கைதுசெய்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக மறுநாளான 10.05.2023 அன்று மருத்துவ பரிசோதனைக்காக கொட்டாரக்கரை அரசு தாலுகா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் அவரை…

ஹோர்முஸ் நீரிணை: டிரம்ப் புதிய கெடு – இஸ்ரேலின் இரு நகரங்கள் மீது இரான் தாக்குதல் – என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Chip Somodevilla/Getty Images22 மார்ச் 2026, 06:04 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்ஹோர்முஸ் நீரிணையைத் திறந்துவிட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரானுக்குப் புதிய காலக்கெடு விதித்துள்ளார்.இரான் அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஹோர்முஸ் ஜலசந்தியை முழுமையாகத் திறக்க வேண்டும் என்று அவர் கூறினார்.டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில், “எந்தவித அச்சுறுத்தலும் இன்றி அடுத்த 48 மணி நேரத்திற்குள் இரான் ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கவில்லை என்றால், அமெரிக்கா…

1 62 63 64 65 66 529