கொழும்பு சிறைச்சாலையில் அமைதியின்மை, துப்பாக்கிச் சூடு சத்தம், கைதி மரணம் – என்ன நடந்தது?
கட்டுரை தகவல்எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்பதவி, பிபிசி தமிழுக்காகபிரசுரிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்கொழும்பு புறநகர் பகுதியிலுள்ள மஹர சிறைச்சாலையில் இன்று (ஆகஸ்ட் 1) பிற்பகல் ஏற்பட்ட அமைதியின்மையால் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவத்தில் 6 பேர் காயமடைந்து ராகமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.மஹர சிறைச்சாலைக்குள் இன்று பிற்பகல் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. இதன்போது, நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மேலதிகமாக போலீசார், விசேட…









