Daily Archives: August 1, 2026

திருப்பூர்: விளை நிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் பாரத் பெட்ரோலியம்; வீதியில் இறங்கிய விவசாயிகள்!

பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் கோவையில் இருந்து தேவனஹொந்தி வரை 340 கி.மீ தொலைவுக்கு எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டம் நடைபெற்று வருகிறது. முத்தூரில் இருந்து தேவனஹொந்தி வரையிலான பகுதிகள் நெடுஞ்சாலை வழியாகப் பதிக்கப்படும் நிலையில், இருகூரில் இருந்து முத்தூர் வரையிலான 70 கி.மீ தொலைவிற்கு மட்டும் விவசாய நிலங்கள் வழியே எண்ணெய் குழாய்கள் பதிக்கப்பட இருக்கிறது. விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய்களை பதிப்பதால் விபத்து அபாயம் மட்டுமின்றி பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என விவசாயிகள் எதிர்ப்பு…

காமன்வெல்த்: “11 மாதக் குழந்தையின் அம்மா: PhD மாணவி” – தடைகளைத் தாண்டி சாதித்த சீமா – யார் இவர்? | Seema Kaliramna achieved a milestone by winning a bronze medal at the Commonwealth Games. |

ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் பெண்களுக்கான தட்டு எறிதல் பிரிவில் ஹரியானாவின் சீமா காலிராம்னா பங்கேற்றார். போட்டியில் 58.65 மீட்டர் தூரம் தட்டு எறிந்து மூன்றாம் இடம் பிடித்து இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார் சீமா காலிராம்னா. ஆறு வாய்ப்புகளில் நான்கு வாய்ப்புகள் தவறியபோதும், சோர்ந்துபோகாமல் அவர் எறிந்த அந்த ஒரு வீச்சு, ஒட்டுமொத்த இந்தியாவின் நம்பிக்கையையும் பதக்கப் பட்டியலை நோக்கி உயர்த்தியிருக்கிறது.களத்தில் எறிந்த ஒவ்வொரு வீச்சிலும்…