10% இடஒதுக்கீடு: உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி திமுக மனு – 10 தகவல்கள்
பட மூலாதாரம், Getty Images9 மணி நேரங்களுக்கு முன்னர்பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் 103ஆம் அரசியலமைப்பு திருத்தம் செல்லும் என்று உறுதிப்படுத்தி உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 7ஆம் தேதி அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுவை இந்திய உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாட்டில் ஆளும் திமுக தாக்கல் செய்துள்ளது. இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட தகவலை மாநிலங்களவை திமுக உறுப்பினரும் வழக்கறிஞருமான வில்சன் பிபிசியிடம் உறுதிப்படுத்தினார். முக்கியத்துவம்…









