`2024-ல் விருதுநகர் தொகுதியில் போட்டி?’ – சிவகாசியில் துரை வைகோ பேசியது என்ன?!
ம.தி.மு.க. விருதுநகர் மேற்கு, கிழக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் சிவகாசியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட அக்கட்சியின் தலைமைக்கழக செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், “ம.தி.மு.க.வில் கடந்த 4 மாதங்களாக உறுப்பினர் சேர்ப்பு பணி நடைபெற்றது. இதன்மூலம் 30 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அடுத்துவரும் நாள்களில் கட்சியின் அமைப்புத்தேர்தல் நடக்க உள்ளது. கட்சி வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து விவாதித்தோம். இந்த மாவட்டத்தின் முக்கிய தொழிலான பட்டாசு, தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க தேவையான…









