Browsing: செய்திகள்

அரசு தொடக்கப் பள்ளி டு கோரக்பூர் ஐஐடி இஸ்ரோ தலைவராகும் குமரி விஞ்ஞானி நாராயணன் கடந்துவந்த பாதை | Story of the Isro chairman narayanan

இந்நிலையில் ஐ.எஸ்.ஆர்.ஓ தலைவராக மீண்டும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. விஞ்ஞானி நாராயணனின் தந்தை வன்னிய பெருமாள், தாய் தங்கம்மாள். வன்னியபெருமாள் தேங்காய் வியாபாரம் செய்து வந்தார். ஏழைகுடும்பத்தைச் சேர்ந்த நாராயணன் கீழ காட்டுவிளை அரசு தொடக்கப் பள்ளியில் படித்தார். ஆதிக்காட்டுவிளை ஊராட்சியில் உள்ள சியோன்புரம் சி.எஸ்.ஐ பள்ளியில் உயர்நிலை படிப்பைத் தொடர்ந்தார். நாகர்கோவில் அருகே உள்ள கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் டிப்ளமோ படித்தார்.  கோரக்பூர் ஐ.ஐ.டி-யில் கிரயோஜனிக் இன்ஜினீயரிங் பிரிவில் எம்.டெக் பயின்று…

OYO: திருமணமாகாத ஜோடிகளுக்கு அறை கிடைக்காதா? – புதிய விதி கூறுவது என்ன?

பட மூலாதாரம், OYOகட்டுரை தகவல்எழுதியவர், கோட்டேரு ஸ்ராவனி பதவி, பிபிசி செய்தியாளர்8 ஜனவரி 2025, 05:36 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்ஹோட்டல் ரூம்களை ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்யும் வசதியை அளிக்கும் நிறுவனமான ஓயோ (OYO), தனது கூட்டாளி ஹோட்டல்களுக்கு புதிய செக்-இன் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய கொள்கையின்படி, ஓயோ அறையை ஆன்லைனில் முன்பதிவு செய்ய விரும்பும் ஜோடிகள், முன்பதிவு செய்யும் போதும், அறையில் வந்து தங்கும்போதும் (Check-in.) தங்களுடைய திருமண உறவை உறுதி செய்யும்…

Hansika Motwani:`குடும்ப வன்முறை’ – ஹன்ஸிகா மோத்வானி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்த காவல்துறை! | Hansika Motwani’s sister-in-law files FIR against her family

மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலக்கு அறிமுகமான நடிகை ஹன்ஸிகா மோத்வானி. அதைத் தொடர்ந்து பல்வேறு மொழிப் படங்களில் நடித்து தனக்கான ரசிகர் வட்டத்தை அமைத்துக் கொண்டவர். இவருடைய சகோதரர் பிரசாந்த் மோத்வானிக்கும், தொலைக்காட்சி நடிகையான முஸ்கன் நான்சி ஜேம்ஸ் என்பவருக்கும் 2020-ல் திருமணம் நடந்தது. ஆனால் 2022-ல் இருவரும் பிரிந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக தனித் தனியே வாழ்கின்றனர். இந்த நிலையில், மும்பையில் உள்ள அம்போலி காவல் நிலையத்தில் டிசம்பர் 18, 2024 அன்று பாரதிய…

அனிதா ஆனந்த்: கனடா பிரதமராக இந்திய வம்சாவளி முதல் இந்து அமைச்சர் தேர்வு ஆவாரா? யார் இவர்?

பட மூலாதாரம், Bloomberg via Getty Imagesபடக்குறிப்பு, 57 வயதான அனிதா 2019ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்தார்5 மணி நேரங்களுக்கு முன்னர்கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆளும் லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் இந்த பதவிகளில் நீடிப்பார்.அதாவது, அவரது கட்சி பொதுத் தேர்தலுக்குச் செல்வதற்கு முன்பு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும். ஆனால், தேர்தல் தொடர்பாக வரும் கருத்துக்கணிப்புகளில் அவரது கட்சி…

`தவறான எண்ணத்துடன் கையைப் பிடித்தார்'- நடிகை ஹனி ரோஸ் புகார்; தொழிலதிபர் மீது வழக்கு

கேரளாவைச் சேர்ந்த நடிகை ஹனி ரோஸ் பல்வேறு தனியார் நிறுவனங்களின் திறப்பு விழாவில் கலந்துகொண்டு வருகிறார். ஒரு திறப்பு விழாவில் கலந்துகொண்டபோது அந்த நிறுவன உரிமையாளரான தொழில் அதிபர் இரட்டை அர்த்தத்தில் பேசி தன்னை அவமானப்படுத்தியதாக ஹனி ரோஸ் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.அதன்பிறகு அந்த நபருக்கு சொந்தமான நிறுவனங்களின் நிகழ்ச்சிகளுக்கு செல்ல மறுத்ததாகவும் நடிகை ஹனி ரோஸ் கூறியிருந்தார். இதுகுறித்து நடிகை ஹனி ரோஸ் ஃபேஸ்புக்கில் வெளிப்படையாகப் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவுக்கு பலர் மோசமான கமென்ட்களை பதிவிட்டனர்.…

ஜஸ்டின் ட்ரூடோ: இந்தியா – கனடா இருநாட்டு உறவு மேம்படுமா? ஓர் அலசல்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்த பின்னர் தன்னை ஒரு போராளி என்று அழைத்தார்.கட்டுரை தகவல்கனடா உலகம் முழுவதுமே தற்போது தலைப்புச் செய்தியாக உள்ளது. காரணம் அங்குள்ள பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. அவர் பிரதமர் பதவி மற்றும் ஆளும் லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து திங்கள்கிழமை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தான் பதவி விலகுவது குறித்து செய்தியாளர் சந்திப்பில் ட்ரூடோ அறிவித்தார். கட்சியின் தலைவர் பதவியை…

ஜல்லிக்கட்டு: `காளை வளர்த்தால் உதவித்தொகை; தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?’ – கேட்டும் காளை வளர்ப்போர் | Jallikattu bulls owners request to government

இந்த நிலையில்தான் சில கோரிக்கைளை மாட்டு உரிமையாளர்களும், மாடுபிடி வீரர்களும் வைக்கிறார்கள். நம்மிடம் பேசிய ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், “தற்போதைய தமிழக முதல்வர், தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போருக்கு ஒரு காளைக்கு மாதம்தோறும் ரூ. 1000 உதவித்தொகையை வழங்க வேண்டும். பாரம்பரியத்தை பாதுகாக்கும் நோக்கில் காளைகளை வளர்ப்பவர்களுக்கு அதிகம் செலவாகிறது, அதற்கு உதவித்தொகை உதவும். அதுபோல் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ காப்பீடு செய்ய வேண்டும், அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டு நடக்கும்…

காபொயேரா – பிரேசிலில் பிரபலம் அடைந்த ஆப்பிரிக்காவின் பாரம்பரிய தற்காப்பு நடனம்

காணொளிக் குறிப்பு, காபொயேரா – பிரேசிலில் பிரபலம் அடைந்த ஆப்பிரிக்காவின் பாரம்பரிய தற்காப்பு நடனம்காபொயேரா – பிரேசிலில் பிரபலம் அடைந்த ஆப்பிரிக்காவின் பாரம்பரிய தற்காப்பு நடனம்37 நிமிடங்களுக்கு முன்னர்ஆப்பிரிக்காவின் அங்கோலா நாட்டில் மிகவும் பிரபலமாக இருந்தது ‘ங்கோலா என்ற நடனம். ஆப்பிரிக்கர்களின் பாரம்பரிய நடனமான இது, அவர்கள் அடிமைகளாக அமெரிக்க நாடுகளுக்கு வந்த போது, பிரேசிலில் பரவியது. பிரேசிலில் நூறாண்டுகளுக்கும் மேலாக இந்த நடனம் இளைஞர்கள் மத்தியில் ஆடப்பட்டு வருகிறது.காபொயேரா என்று அழைக்கப்படும் இந்த நடனம் போன்றும்…

சென்னை: தொழிலதிபரை நம்பவைத்து ரூ.10 லட்சம் மோசடி; `சென்ட்டிமென்ட்' சங்கர் சிக்கியது எப்படி?

திருச்சி மாவட்டம், இளங்காகுறிச்சி, பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் முகமது நசுருதீன் (43). இவர் கட்டட பொருள்கள் சப்ளை மற்றும் பெயின்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு தொழில் முறையில் சுதன் என்பவர் மூலம் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த சங்கர் என்பவர் அறிமுகமானார். பின்னர் சங்கரும் முகமது நசுருதீனும் நட்பாக பழகி வந்தனர். கடந்த 2024-ம் ஆண்டு சங்கர், தனது தங்க நகை அடமானத்தில் உள்ளதாகவும் அந்தக் கடனை அடைக்க உதவி செய்யுங்கள் என முகமது நசுருதீனிடம்…

தமிழ்நாட்டில் போராட அனுமதி மறுக்கப்படுவது ஏன்? திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறவில் விரிசலா?

பட மூலாதாரம், Social Mediaகட்டுரை தகவல்தமிழ்நாட்டில் அவ்வப்போது எழும் பிரச்னைகள் குறித்து போராட்டங்கள் நடத்தவோ, ஆர்ப்பாட்டங்கள் நடத்தவோ சமீப காலமாக அனுமதி கொடுக்கப்படுவதில்லை என பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் குற்றம் சாட்டுகின்றன. எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் ஆளும் தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளே இத்தகைய குற்றச்சாட்டுகளை சுமத்துவதுதான் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. என்ன நடக்கிறது?போராட்டங்களுக்கு அனுமதி மறுப்புதமிழ்நாட்டில் கடந்த நான்கைந்து மாதங்களாகவே, அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து போராட அனுமதி கோரினால் அவை…

1 273 274 275 276 277 531