Browsing: செய்திகள்
ராஜஸ்தான்: மீசையை மழித்ததற்காக ரூ.11 லட்சம் அபராதம் – என்ன காரணம்?
பட மூலாதாரம், BBC/Mohar Singh Meenaபடக்குறிப்பு, ரோன்சி கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர்கள், கரிரி கிராமப் பிரதிநிதிகளுக்கு ரூ.11 லட்சம் வழங்குகிறார்கள்.கட்டுரை தகவல்எழுதியவர், மோஹர் சிங் மீனாபதவி, பிபிசி ஹிந்திக்காக4 பிப்ரவரி 2025, 11:03 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்ராஜஸ்தானில் உள்ள கரௌலியின் பெயர் கடந்த சில நாட்களாக செய்திகளில் இடம்பிடித்தது. இதற்கு காரணம் அங்குள்ள மகாபஞ்சாயத்து எடுத்த முடிவுதான் . ஜனவரி 27 அன்று, கரௌலியின் ரோன்சி கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்திற்கு ரூ.11…
Siragadikka aasai : ஒன்று சேர்ந்த வில்லிகள், 2k கிட்ஸ் மனநிலையை பிரதிபலிக்கும் ஸ்ருதி | Siragadikka aasai serial new update
ஸ்ருதி காணாமல் போன விஷயத்தை ரவி முத்துவிடம் சொல்கிறார். முத்துவும் மீனாவும் ஸ்ருதியின் ரெகார்டிங் ஸ்டூடியோ சென்றுப் பார்க்கின்றனர். அங்கு வேறு ஒரு முகவரியை சொல்ல அங்கும் போய் விசாரிக்கின்றனர். அப்போது ஸ்ருதி விவாகரத்துச் செய்யும் வழக்கறிஞரை சந்திக்க சென்றிருப்பது தெரிய வருகிறது. இருவரும் வழக்கறிஞர் இருக்கும் முகவரிக்கும் செல்கின்றனர். அங்கு ஸ்ருதி காத்திருப்பு அறையில் அமர்ந்திருக்கிறார். ரவியை விவாகரத்து செய்யப் போவதாக சொல்கிறார். மீனாவும் முத்துவும் அதிர்ந்துப் போகின்றனர். இதோடு நேற்றைய எபிசோட் முடிகிறது. எப்படியும்…
தமிழ்நாடு: நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஜிபிஎஸ் நோயால் 9 வயது சிறுவன் உயிரிழப்பு – முக்கிய செய்திகள்
பட மூலாதாரம், Getty Images54 நிமிடங்களுக்கு முன்னர்க்யோன் பெர்ரே சிண்ட்ரோம் என்ற நோய் பாதிப்பால், சென்னையில் ஒரு சிறுவன் உயிரிழந்ததாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.அந்த செய்தியில், “மகாராஷ்டிரம், மேற்கு வங்கத்தை தொடா்ந்து ஜிபிஎஸ் நோய் தொற்றால் சென்னை எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்துள்ளார். திருவள்ளூா் அருகே திருவூா் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த பிரேம்குமாரின் மகன் பி.மைத்தீஸ்வரன் (9). சிறுவனுக்கு கடந்த ஜன. 22-ஆம் தேதி பள்ளிக்கு செல்ல முயன்ற…
Sakthi Vikatan – 18 February 2025 – விரத மகிமை: முற்பிறவியில் நாரதர் யார் தெரியுமா | glories of fasting and lord vishnu devotional story
விரத மகிமை: முற்பிறவியில் நாரதர் யார் தெரியுமா! மத் பாகவதம், சாதுர்மாஸ்ய விரத மகிமையைப் பற்றி விவரிக்கிறது. ஒரு முறை சந்நியாசிகள் கூடி, சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு இருந்தனர். அவர்களுக்குப் பணிவிடை செய்ய சிறுவன் ஒருவன் நியமிக்கப்பட்டான்.விரத மகிமை அவனுக்குத் தந்தை இல்லை; தாயார் மட்டுமே. சந்நியாசிகளுக்குப் பணிவிடை செய்வதில் மிகவும் ஊக்கமாக இருந்தான் அந்தச் சிறுவன்.அவனிடம், சந்நியாசிகள் மிகுந்த கருணையோடு இருந்தனர். தாங்கள் உணவை அவனுக்குக் கொடுத்தனர். சிறுவன் மகிழ்ச்சியோடு அதைச் சாப்பிட்டான். சாதுர்மாஸ்ய விரதம்…
சார்லஸ் ஷோப்ராஜ்: வியட்நாமில் பிறந்து திகார் சிறையில் தனி ராஜ்ஜியம் நடத்திய இவர் யார்?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சார்லஸ் ஷோப்ராஜ்கட்டுரை தகவல்எழுதியவர், ரெஹான் ஃபசல்பதவி, பிபிசி ஹிந்தி3 பிப்ரவரி 2025, 01:56 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்கடந்த 1981 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் தேதி அன்று, திகார் சிறையின் செய்தித் தொடர்பாளரும் சட்ட ஆலோசகருமான சுனில் குமார் குப்தா, தனக்கு கிடைத்த ஏஎஸ்பி பதவி நியமனக் கடிதத்துடன் சிறைக் கண்காணிப்பாளர் பி.எல்.விஜ் என்பவரின் அலுவலகத்தை அடைந்தார்.திகார் சிறையில் வேலை கிடைத்தவுடனேயே, அவர் வடக்கு ரயில்வேயில்…
“நான் பேசிய வீடியோ இதுதான்.. திரித்து வெளியிட்டு விவாதம் ஆக்கியுள்ளனர்” -சுரேஷ்கோபி விளக்கம் | Delhi campaign; Suresh Gopi explains controversial speech
`திரித்து வெளியிட்டு விவாதம் ஆக்கியுள்ளனர்…’சமூக வலைத்தளத்தில் வீடியோவுடன் தனது பேச்சுகுறித்து மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி அளித்துள்ள விளக்கத்தில் கூறுகையில், “டெல்லி தேர்தலில் எனது பிரசாரத்தில் நான் பேசியதை சொந்த விருப்பத்துக்காக சில ஊடகங்கள் திரித்து வெளியிட்டு விவாதம் ஆக்கியுள்ளனர். இந்தியாவில் ஆண்டுக்கணக்கில் நிலவும் சாதி வித்தியாசங்களை தாண்டி ஒவ்வொரு இந்தியரையும் சமமாக பார்க்கவேண்டும் என்பது பாபாசாகேப் முன்வைத்த பெருங்கனவாகும். இந்த சமத்துவத்தின் ஒருபகுதியாகத்தான் பட்டியலின மக்களை முன்னேறிய வகுப்பினர் பாதுகாக்கவேண்டும் எனவும், முன்னேறிய வகுப்பினரின் விவகாரங்களில் பட்டியலின…
மகா கும்பமேளா: பெண் நாகா துறவிகளின் வாழ்க்கை எப்படி இருக்கும்?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சாத்வி, மகா கும்பமேளா, பிரயாக்ராஜ், ஜனவரி 2025கட்டுரை தகவல்கும்ப மேளாவை நினைக்கும்போது, நம் மனதில் முதலில் தோன்றுவது நாகா துறவிகளின் (சாதுக்கள்) கூட்டம்தான், எண்ணற்ற துறவிகள் நீராட விரையும் காட்சி… அதுவும், ‘ஆண்- துறவிகள்’…கும்ப மேளாவில் பெண் துறவிகளும் உள்ளனர். ஆனால், அப்படி எவ்வளவு பேர் உள்ளனர்? கும்ப மேளா அமைப்பில் அவர்களுக்கான இடம்தான் என்ன? என் மனதில் இதுபோன்று பல கேள்விகள் இருந்தன.நாகா துறவிகள் கும்ப மேளாவுக்கு எப்படி தயாராகின்றனர்…
இந்த வாரம் உகந்த தேதி எது? துலாம் முதல் மீனம் வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள்
துலாம் ராசி அன்பர்களே!வருமானம் திருப்தி தருவதாக இருந்தாலும், தேவையற்ற செலவுகளால் கடன் ஏற்படக் கூடும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வழக்குகளில் இருந்து வந்த பிற்போக்கான நிலை மாறி, சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.அலுவலகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். உயர்ந்த பதவி தேடி வரும். சம்பள உயர்வும் கிடைக்கும். சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பற்று வரவு சுமுகமாக நடை பெறும்.…
அண்ணா பல்கலை. மாணவி வழக்கு: சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு எதிராக போராட்டம் ஏன்?
பட மூலாதாரம், Special Arrangementகட்டுரை தகவல்அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழுவின் நடவடிக்கைகளைக் கண்டித்து சென்னையில் சனிக்கிழமையன்று (பிப்ரவரி 1) செய்தியாளர்கள் போராட்டம் நடத்தினர். செய்தியாளர்களின் செல்போன்களை சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் பறிமுதல் செய்ததைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடந்துள்ளது.சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதுதொடர்பாக கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி…









