Browsing: செய்திகள்

விகடன் இணையதளம் முடக்கம்: `அதெப்பிடி ஒரு தலைவருக்கு கைவிலங்கிடலாம்' – பிரகாஷ் ராஜ் மறைமுக விமர்சனம்

இணைஅமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, அந்நாட்டு ராணுவம் இந்த மாத தொடக்கத்தில் சட்ட விரோதமாகக் குடியேறிய இந்தியர்களைக் கைகால்களில் விலங்கிட்டு இந்தியாவுக்கு நாடுகடத்திய சம்பவம் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. மக்கள் மத்தியில் பெரும் ஆதங்கத்தை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியோ அல்லது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரோ அமெரிக்காவுக்கு எந்த எதிர்ப்போ, கண்டனமோ தெரிவிக்கவில்லை.விகடன் அதனைச் சுட்டிக்காட்டும் வகையில், மோடி பற்றிய கார்ட்டூன் படம் பிப்ரவரி 10-ம் தேதி விகடன் ப்ளஸ் இணைய…

சென்னை: ஷாமியானா பந்தலுக்கு வாடகைப் பணம் தர மறுத்ததால் இளைஞர் கொலை

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம்3 நிமிடங்களுக்கு முன்னர்(தமிழகம், இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் தொடர்பாக, 17/02/2025 அன்று வெளியான நாளிதழ் மற்றும் இணைய செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்)சென்னையில் வாடகைப் பணம் தர மறுத்த இளைஞரை கொலை செய்த வழக்கில் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர் என தினமணி நாளிதழின் செய்தி தெரிவிக்கிறது.அச்செய்தியில், “சென்னை, கொடுங்கையூர் ரிக்ஷா காலனி பகுதியைச் சேர்ந்தவர் கிரி (48). இவரது தாயார் சமீபத்தில் உயிரிழந்தார்.…

“துன்புறும் சிறுமிகள் `அப்பா.. அப்பா' எனக் கதறுவது ஸ்டாலினுக்கு கேட்கலையா?'' -எடப்பாடி பழனிசாமி

வேலூர் கோட்டை மைதானத்தில், இன்று (பிப்ரவரி-16) மாலை, அ.தி.மு.க-வின் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மண்டல மாநாடு நடைபெற்றது.இதில், அக்கட்சியின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுப் பேசும்போது, “ `அ.தி.மு.க-வின் அறிக்கை பா.ஜ.க-வின் அறிக்கையையொட்டி இருக்கிறது’ என முதலமைச்சர் ஸ்டாலின் சொல்கிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என எந்தக் காலத்திலும் அ.தி.மு.க யாரையும் நம்பி இல்லை. யாரை ஒட்டியும் அரசியல் செய்தது கிடையாது. இது மக்களை நம்பியிருக்கும் கட்சி. நாங்கள் யாரையும் நாடியது…

மும்மொழிக் கொள்கை: தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு தமிழக தலைவர்கள எதிர்ப்பு – தமிழக பாஜக கூறுவது என்ன?

காணொளிக் குறிப்பு, மத்திய அமைச்சர் பேச்சுக்கு கொந்தளித்த தலைவர்கள்மும்மொழிக் கொள்கை: தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு தமிழக தலைவர்கள எதிர்ப்பு – மாநில பாஜக கூறுவது என்ன?9 நிமிடங்களுக்கு முன்னர்’சமக்ரா சிக்ஷா அபியான்’ என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதி தொடர்பான கேள்விக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்த பதில் தமிழ்நாட்டு தலைவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.தனிச் சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக் குணத்தை டெல்லி பார்க்க…

Painkili Review: `இதெல்லாம் ஜோக் கிடையாது ப்ரதர்!' – காமெடியால் சோதிக்கும் `ஆவேஷம்' கூட்டணி

தன்னுடைய சொந்த ஊரில் சொந்தமாகத் தொழில் ஒன்றைத் தொடங்கிக் கவனித்து வருகிறார் சுகு (சஜின் கோபு). குடும்பத்தினர், நண்பர்கள் எனத் தனது வட்டத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர், தன்னுடைய தொழிலுக்காக ஒரு பொருளை வாங்கி வருவதற்காகக் கோவைக்குச் செல்கிறார். அங்கு தன்னுடைய பைக்கைத் திருடிச் செல்லும் நபரிடமிருந்து பைக்கை மீட்கப் போராடும் சுகு, எதிர்பாராத வகையில் அவரைக் கொலை செய்து விடுகிறார். அங்கிருந்து தப்பி ஓடி கொலை வழக்கைச் சமாளிக்கத் தான் மனநலம் பாதிக்கப்பட்டவன் எனப் போலியாகச் சான்றிதழ்களைத்…

திருப்பரங்குன்றம்: சிக்கந்தர் மலை vs கந்தர் மலை- தற்போது என்ன நிலவரம்?

கட்டுரை தகவல்திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகளை பலியிடுவதை எதிர்த்து இந்து அமைப்புகள் போராட்டத்தை அறிவித்த நிலையில், மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடை உத்தரவு நீக்கப்பட்ட பின்னரும் காவல்துறையின் கெடுபிடிகள் அதிகரித்துவிட்டதாக கூறுகின்றனர், தர்கா நிர்வாகிகள்.இரு தரப்பும் ஒற்றுமையாக வாழ்ந்து வருவதாக ஊடகங்களில் பேசியதால் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாக இப்பகுதி மக்கள் சிலர் கூறுகின்றனர்.திருப்பரங்குன்றம் மலையில் என்ன நடக்கிறது? தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு கோவில் மற்றும் தர்கா நிர்வாகிகள் கூறுவது என்ன?படக்குறிப்பு, பிபிசி…

List 2 ரெடி! பதறும் மந்திரிகள்! சாட்டையை சுழற்றும் STALIN! | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,திமுகவில் 4 புதிய மாவட்டங்கள் உருவாகியுள்ளது. நான்கு மாவட்ட செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் விழுப்புரத்தில், லட்சுமணன் நியமிக்கப்பட்டதற்கு பின்னணியில், சி.வி சண்முகத்துக்கு வைக்கப்படும் செக் உள்ளது. ஈரோட்டில், தோப்பு வெங்கடாசலம் கொண்டு வந்ததன் பின்னணியில், செந்தில் பாலாஜி உள்ளார். ‘டார்கெட் வெஸ்ட்’ என்பது கொடுக்கப்பட்ட அசைன்மென்ட். பட்டுக்கோட்டையில், அண்ணாதுரை கட்டம் கட்டப்பட்டதற்கு பின்னணியில் இருக்கும் பரபரப்புகள். விரைவில் 100 மாவட்டங்கள் உருவாக்கத் திட்டம். இதில், ‘தங்கள் மாவட்டங்களும் அடங்குமோ?!’ என அலறும் அமைச்சர்கள். முக்கியமாக,…

ரஷ்யா – யுக்ரேன்: ஐரோப்பா தனியொரு ராணுவத்தை உருவாக்க ஜெலன்ஸ்கி அழைப்பு – அமெரிக்கா பற்றி கூறியது என்ன?

பட மூலாதாரம், EPAகட்டுரை தகவல்எழுதியவர், டியர்பெய்ல் ஜோர்டன்பதவி, செய்தியாளர், பிபிசி நியூஸ்15 பிப்ரவரி 2025, 15:30 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்அமெரிக்கா இனிமேலும் ஐரோப்பாவின் உதவிக்கு வராது என கருத்து தெரிவித்துள்ள யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கி, ரஷ்யாவுக்கு எதிராக பாதுகாத்துக் கொள்ள “ஐரோப்பாவின் ராணுவம்” ஒன்றை உருவாக்க அழைப்பு விடுத்தார்.மியூனிச் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அவர், “யுக்ரேன் தங்கள் முதுகுக்கு பின்னால் தங்களது பங்களிப்பு இல்லாமல் செய்யப்படும் எந்த ஒரு ஒப்பந்தத்தையும் ஏற்றுக்கொள்ளாது “…

'கள்ளச்சாராய வியாபாரத்தை மூடி மறைக்கும் காவல்துறையே…' – கடுமையாக சாடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!

மயிலாடுதுறையில் கள்ளச்சாராய வியாபாரிகளை தட்டிக்கேட்ட விவகாரத்தில் ஹரிஸ் மற்றும் ஹரிசக்தி ஆகிய இருவர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில், ‘கள்ளச்சாராயத்தை ஒழிக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் குற்றம்சாட்டியிருக்கிறார்.பெ.சண்முகம் இது தொடர்பாக பெ.சண்முகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட முட்டம் கிராமத்தில் கள்ளச்சாராய விற்பனை செய்த வியாபாரிகளை தட்டிக் கேட்ட இரண்டு கல்லூரி மாணவர்கள் ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி ஆகியோரை கள்ளச்சாராய வியாபாரிகள் கூர்மையான…

எப்-35: அமெரிக்கா இந்தியாவுக்கு விற்க முன்வந்துள்ள எப்-35 போர் விமானத்தின் தனிச் சிறப்புகள் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, எப்-35 போர் விமானம் என்பது ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமாகும்15 பிப்ரவரி 2025, 01:22 GMTபுதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர்இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் நேற்று வெள்ளை மாளிகையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.இந்த பேச்சுவார்த்தையின் போது வர்த்தகம், பாதுகாப்பு, குடியேற்றம் போன்ற விஷயங்கள் குறித்து பேசிய அவர்கள் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டனர்.பாதுகாப்பு தொடர்பாக ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார் டொனால்ட் டிரம்ப், “இந்த ஆண்டு,…

1 254 255 256 257 258 531