ரஷ்யா – யுக்ரேன்: ஐரோப்பா தனியொரு ராணுவத்தை உருவாக்க ஜெலன்ஸ்கி அழைப்பு – அமெரிக்கா பற்றி கூறியது என்ன?

Share

ரஷ்யா - யுக்ரேன், அமெரிக்கா, ஐரோப்பா

பட மூலாதாரம், EPA

  • எழுதியவர், டியர்பெய்ல் ஜோர்டன்
  • பதவி, செய்தியாளர், பிபிசி நியூஸ்

அமெரிக்கா இனிமேலும் ஐரோப்பாவின் உதவிக்கு வராது என கருத்து தெரிவித்துள்ள யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கி, ரஷ்யாவுக்கு எதிராக பாதுகாத்துக் கொள்ள “ஐரோப்பாவின் ராணுவம்” ஒன்றை உருவாக்க அழைப்பு விடுத்தார்.

மியூனிச் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அவர், “யுக்ரேன் தங்கள் முதுகுக்கு பின்னால் தங்களது பங்களிப்பு இல்லாமல் செய்யப்படும் எந்த ஒரு ஒப்பந்தத்தையும் ஏற்றுக்கொள்ளாது ” என்றார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் அமைதி பேச்சுவார்த்தையைத் தொடங்க ஒப்புக்கொண்ட பிறகு ஸெலென்ஸ்கி இதைக் கூறியுள்ளார்.

வெள்ளிக்கிழமை நிகழ்த்திய உரையில் ஐரோப்பிய ஜனநாயகங்களை தாக்கிப் பேசிய அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், பாதுகாப்புத் துறையில் “ஐரோப்பா பெரிய அளவில் முன்னேற வேண்டியிருப்பதாக” எச்சரித்திருந்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com