ஆசியாவின் முதல் முழுமையான கைகள் மாற்று அறுவை சிகிச்சை – சாதித்த மும்பை மருத்துவர்கள்| A Rajasthani man underwent bilateral arm transplant, the first of its kind in Asia
பிறகு, ராமின் குடும்பத்தினர் அவருக்குச் செயற்கை கைகளைப் பெற முயன்றனர். ஆனால் அது அவருக்குப் பொருந்தவில்லை. ராம் முற்றிலுமான தன் இரு கைகளையும் இழந்ததால் தன் அன்றாட சிறு தேவைகளுக்குக்கூட பிறரின் உதவியை எதிர்பார்க்கும் சூழலில் இத்தனை வருடங்களாக வாழ்ந்து வந்துள்ளார். விபத்து பற்றி பேசியுள்ள பிரேம ராம், “எனது இரண்டு கைகளையும் இழந்ததை பேரிழப்பாகக் கருதினேன். துண்டிக்கப்பட்ட கைகளைக் கையாள்வதை விட இதனால் ஏற்பட்ட மனச்சோர்வுதான் மிகவும் அதிகமான இருந்தது. இந்தச் சூழல் பெரும் சவாலாக இருந்தது. அப்போது இருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் நான் போராடினேன்.…








