Browsing: ஆரோக்கியம் | Health

ஒரு வயதுக் குழந்தையின் மூளையில் வளர்ந்த `ஒட்டுண்ணி இரட்டையர்’; கண்டுபிடித்து அகற்றிய மருத்துவர்கள்!

மருத்துவ உலகம் நாளுக்கு நாள் பல சாதனைகளை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது. இந்தச் சாதனைகளால் தான் கோவிட் போன்ற அதிக பரவும் தன்மையுள்ள வைரஸிடம் இருந்து நாம் போராடி மீண்டு வந்து கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட மருத்துவத்துறையில் அவ்வப்போது சில வியத்தகு விநோதங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படி ஒரு சம்பவம் தான் சீனாவில் நடைபெற்றுள்ளது.மூளையில் இருக்கும் கருசீனாவின் ஷாங்காய் நகரில், ஒரு வயது ஆன குழந்தையின் தலை தொடர்ந்து வளர்ந்து வருவதைக் கவனித்த பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு…

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க இந்த உணவுகளை அவசியம் எடுத்துக்கணும்… பச்சிளம் குழந்தை பராமரிப்பு –12

`பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு ‘பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்ளைக் கொண்டு, எளிதில் விளங்கும் வண்ணம், விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம்.மருத்துவர் மு. ஜெயராஜ்இயற்கையாக தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவும் எளிய உணவுகள்…| பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 11புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவரான மு. ஜெயராஜ்…

ஆணுறுப்பின் மேல்தோல், பின்னுக்குத் தள்ளமுடியாத பிரச்னை; காரணமும் தீர்வும்! #VisualStory

maleஆணுறுப்பின் மேல்தோலை பின்னுக்குத் தள்ளி சுத்தம்செய்வது மிகமிக அவசியம். இல்லையென்றால், ஆணுறுப்பில் கிருமித்தொற்று ஏற்படும். மருத்துவர்கள்ஆணுறுப்பு கிருமித் தொற்றால், சம்பந்தப்பட்டவரின் இணைக்கும் பிறப்புறுப்பில் கிருமித்தொற்று ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சில ஆண்களுக்கு ஆணுறுப்பின் முன்தோலை பின்பக்கமாக இழுக்க முடியாத பிரச்னை இருக்கிறது.பொதுவாக ஆணுறுப்பின் மேல்தோலை முன்னும் பின்னும் நகர்த்த முடியும். சிலருக்கு மட்டும் பிறவிக்குறைபாடு காரணமாக மேல்தோலானது ஆணுறுப்பின் முன்பகுதியில் ஒட்டிக் கொண்டிருக்கும்.Coupleஅத்தகைய ஆண்கள் திருமணமாகி தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது, அதனை கடினமாக உணர்வார்கள். worried…

சத்துமாத்திரையால் பலியான மாணவி, 11 கிராம் இரும்புச்சத்தால் நேர்ந்த சோகம்; பள்ளியில் நடந்தது என்ன?

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகில் உள்ள காந்தள் பகுதியில் நகராட்சியின் உருதுப் பள்ளி இயங்கி வருகிறது.‌ 200க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பயின்று வரும் இந்தப் பள்ளியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவிகள் 4 பேர், மற்றும் 6- வகுப்பு மாணவர்கள் 2 பேர் என 6 பேருக்குக் கடந்த வாரம் திடீர் மயக்கம் ஏற்பட்டது. இதைக் கண்ட ஆசிரியர்கள் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரிக்கு 6 பேரையும் உடனடியாக அழைத்துச் சென்றனர். குழந்தைகள் அளவுக்கு அதிகமாக சத்து…

‘தூங்கும் முன் வெளிச்சத்தைத் தவிர்த்தால் கர்ப்பகால நீரிழிவு குறையும்’ – ஆய்வில் தகவல் | Dim lights before bed time to reduce risk of gestational diabetes

உலகம் முழுவதும் கர்ப்பகால நீரிழிவு நோயின் ஆபத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கருவில் வளரும் குழந்தையின் வளர்சிதை மாற்றம் காரணமாக, பெண்ணின் உடலில் ரத்தச் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. 2011-13 ஆம் ஆண்டில் கர்ப்பிணிகளின் நீரிழிவு விகிதம் 4.5% ஆக இருந்தது. அதுவே 2020 ஆம் ஆண்டில் 7.8% ஆக உயர்ந்துள்ளது.கர்ப்பகால நீரிழிவினால் பல மகப்பேறு சிக்கல்கள் உருவாகும் அபாயம் உள்ளன.  இதனால் குழந்தை வளரும் போது உடல்பருமன் மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றைச் சந்திக்கும் அபாயமும் உள்ளது. கர்ப்பிணிஎனவே,  கர்ப்பகால நீரிழிவைக் கட்டுப்படுத்த பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் (North…

Doctor Vikatan: கல்லீரலை டீடாக்ஸ் செய்வது சாத்தியமா?

Doctor Vikatan: கல்லீரலை பாதிக்கும் மஞ்சள் காமாலை நோயைத் தவிர்க்க முடியுமா? கல்லீரலை டீடாக்ஸ் செய்வது சாத்தியமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கல்லீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் காவ்யா டெண்டுகுரி காவ்யா டெண்டுகுரிகல்லீரலை பாதிக்கும் தொற்றுகளில் ஹெபடைட்டிஸ் ஏ, பி, சி, டி, ஈ ஆகிய அனைத்தும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒவ்வொரு வைரஸ் தொற்றும் ஒவ்வொருவித பாதிப்பை ஏற்படுத்தும். ஹெபடைட்டிஸ் ஏ மற்றும் ஈ வகை தொற்றுகளையே நாம் அதிகம் பார்க்கிறோம். இவை மாசற்ற உணவு…

கழிவறை இருக்கையை விட, 40,000 மடங்கு பாக்டீரியா, மீண்டும் பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில்களில் உண்டு!|Reusable water bottles have 40,000 times more bacteria than a toilet seat!

இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், “ இந்த பாக்டீரியா கிருமிகள் நோய்த் தொற்றுகளை ஏற்படுத்தும். இரைப்பை குடல் பிரச்னைகளை ஏற்படுத்தும். மறுமுறை பயன்படுத்தப்படும் தண்ணீர் பாட்டில்களில், கிச்சன் சிங்க்கை விட இரண்டு மடங்கு கிருமிகளும், கம்ப்யூட்டர் மவுஸை விட நான்கு மடங்கு பாக்டீரியாக்களும், செல்லப் பிராணிகள் குடிக்கும் கிண்ணத்தைவிட 14 மடங்கு பாக்டீரியாக்களும் அதிகம் இருக்கின்றன.ஆய்வு செய்யப்பட்ட மற்ற தண்ணீர் பாட்டில்களை ஒப்பிடுகையில், ஸ்குவீஸ் டாப் பாட்டில்கள் (squeeze-top bottles) தூய்மையானவை. மறுமுறை பயன்படுத்தப்படும்  பாட்டில்களை உபயோகிக்கையில், ஒரு…

`ஃபிட்னஸே அவருக்கு மாரடைப்பின் தாக்கத்தைக் குறைத்துள்ளது!’ – சுஷ்மிதா சென்னின் இதயநோய் மருத்துவர்

பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென், மார்ச் மாதத் தொடக்கத்தில் தனக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதற்காக அனுமதிக்கப்பட்டு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை தரப்பட்டு தற்போது நலமுடன் இருப்பதாகவும் சமீபத்தில் தன் இன்ஸ்டகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும், தான் செய்யும் உடற்பயிற்சியால் தான் தற்போது மாரடைப்பில் இருந்து மீண்டுள்ளதாகவும், பெண்கள் யாரும் தங்களுக்கு மாரடைப்பு வராது என அலட்சியமாக இருக்க வேண்டாம் எனவும் அதில் கூறியிருந்தார். View this post on Instagram A post shared by Sushmita Sen (@sushmitasen47) இந்நிலையில், உடற்பயிற்சி தொடர்பாக சுஷ்மிதா சென் சொன்ன…

1 108 109 110 111 112 211