தேவையானவை:
துவரம்பருப்பு – ஒரு கப்
சீரகம் – அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் – ஒன்று
நறுக்கிய தக்காளி – 2
எண்ணெய், கடுகு – ஒரு டீஸ்பூன்
நறுக்கிய பச்சை மிளகாய் – 2
பூசணித்துண்டுகள் – 2 கப்
நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
துவரம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் ஆகியவற்றுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் நான்கு விசில் வரும்வரை வேகவிட்டு எடுக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, கடுகு தாளிக்கவும். பின்னர் இதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். பின்பு நறுக்கிய பூசணி மற்றும் தேவையான உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் இக்கலவையில் சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். கலவை வெந்ததும், வேகவைத்த பருப்புக் கலவையைச் சேர்த்துக் கிளறவும். கொத்தமல்லி தூவி இறக்கவும்.