தென் கொரியாவை வீழ்த்தினால் இறுதி உறுதி- இன்று ஆசியக்கோப்பை ஹாக்கியில் மோதல்
இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசியக் கோப்பை ஆடவர் ஹாக்கிப் போட்டியின் சூப்பர்-4 சுற்றில் இன்று இந்தியா, தென் கொரியாவை வீழ்த்தினால் இறுதிக்கு நிச்சயமாக முன்னேறும்.11-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி இந்தோனேசியாவில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்-4 சுற்றில் முதல் ஆட்டத்தில் ஜப்பானை வீழ்த்திய நடப்பு சாம்பியனான இந்தியா, மலேசியாவுடனான அடுத்த ஆட்டத்தில் ‘டிரா’ கண்டது.இந்த நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) தென்கொரியாவுடன் மோதுகிறது. இவ்விரு அணிகளும் தற்போது தலா 4 புள்ளிகளுடன்…









