பாகிஸ்தான்: உயிரை பணயம் வைத்து இவர்கள் இரானிய எரிபொருளை பைக்கில் கடத்துவது ஏன்?

Share

மஸார்
படக்குறிப்பு, பலூசிஸ்தான் வழியாக தான் மேற்கொள்ளும் எரிபொருள் கடத்தல் பயணங்களில், மஸார் (படத்தில் இருப்பவர்) 50 டிகிரி செல்சியஸ் (120°F) வரையிலான வெப்பநிலையையும், அவர் கொண்டு செல்லும் பொருட்கள் தீப்பிடிக்கும் மற்றும் வெடிக்கும் அபாயங்களையும் எதிர்கொள்கிறார்.

    • எழுதியவர், பிபிசி உலக சேவை
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

மஸாருடைய சிறிய மோட்டார் சைக்கிளில், அவர் அமர்வதற்கு கூட போதிய இடம் இல்லாத அளவுக்கு அதிக அளவிலான பெட்ரோல் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் கேன்கள் ஏற்றப்பட்டுள்ளன.

அவருடைய தேய்ந்துபோன அந்த பைக், மொத்தம் சுமார் 600 பவுண்ட் (272 கிலோ) எடையுள்ள ஐந்து 70 லிட்டர் எண்ணெய் கொள்கலன்களை சுமந்து செல்கிறது.

அந்த எரிபொருள், கயிறு மற்றும் நூலால் கட்டப்பட்டு, அவருடைய மோட்டார் சைக்கிளின் பக்கவாட்டில் பாதுகாப்பற்ற முறையில் தொங்கிக் கொண்டிருக்கிறது.

பாகிஸ்தானின் மிகப்பெரிய மற்றும் ஏழ்மையான மாகாணமான பலூசிஸ்தானில் உள்ள மஸ்துங்கில் இருக்கும் ஒரு திறந்தவெளி எரிபொருள் சந்தையில் மஸார் இதனை வாங்கினார். அப்பகுதியில் தான் அவர் வசிக்கிறார்.

பிளாஸ்டிக் கொள்கலன்கள் ஏற்றப்பட்ட பிக்-அப் டிரக்குகள், இரானில் இருந்து எல்லை வழியாக கடத்தி வரப்பட்ட எரிபொருளை விற்பனை செய்வதற்காக அங்கு கொண்டு வருகின்றன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com