RCB: “இந்திய அணித் தேர்வு பத்தி நான் யோசிக்கல; என் கவனம் இதுல தான் இருக்கு.!”- கேப்டன் ரஜத் பட்டிதார்|Rajat patidar about indian team selection and ipl final

Share

நடப்பு ஐபிஎல் சாம்பியனான பெங்களூரு அணியும், குஜராத் அணியும் இறுதிப் போட்டியில் இன்று (மே. 31) மோத இருக்கின்றன.

போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கும் பெங்களூரு கேப்டன் ரஜத் பட்டிதார், “கடந்த வருடம் நாங்கள் கோப்பையை வென்றோம், ஆனால் இது ஒரு புதிய சீசன்.

நாம் எப்போதும் கடந்த காலத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருக்க முடியாது. இந்த ஃபைனலுக்கு முன்பாக என்னால் என்ன சிறந்த பங்களிப்பைக் கொடுக்க முடியுமோ, அதில் மட்டுமே என் கவனம் இருக்கிறது.

ஃபைனல் போட்டியில் எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம். எங்களுக்கு மற்றுமொரு கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com