உத்னா: குஜராத்தின் இந்த ரயில் நிலையத்தில் திடீரென இத்தனை தொழிலாளர்கள் கூடியது ஏன்? வீடியோவின் பின்னணி

Share

பிபிசி குஜராத்தி | சூரத் | உத்னா ரயில் நிலையம் | காவல்துறை தடியடி | யுபி, பீகார் தொழிலாளர்கள் | புலம்பெயர் தொழிலாளர்கள்

பட மூலாதாரம், UCC

கடந்த ஞாயிற்றுக்கிழமை, சூரத்தின் உத்னா ரயில் நிலையத்தில் ரயில்களில் ஏறுவதற்காக ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் திரண்டனர். அப்போது ஏற்பட்ட கடும் நெரிசலைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் ‘லேசான’ தடியடியைப் பிரயோகிக்கும் சூழல் உருவானது. இது தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலானது.

உத்னா ரயில் நிலையத்தில் ஒரு பெரும் விபத்து நூலிழையில் தவிர்க்கப்பட்டது அந்த காணொளியில் தெரிந்தது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் சூரத்தின் பல தொழில்துறைகள் நலிவடைந்துள்ளதாகவும், இதனால் தங்களுக்கு வேலை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் சில பயணிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

மேலும், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சூரத்தை விட்டு வெளியேறி தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர்.

உத்னா ரயில் நிலையத்தில் ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைக் காலங்களில் இத்தகைய கடும் கூட்ட நெரிசல் ஏற்படுவதும், பயணிகள் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருப்பதும் தொடர்கதையாக உள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com