நேட்டோ போல அரபு – இஸ்லாமிய ராணுவ கூட்டணி உருவாகுமா? இரான் போரால் வேகமெடுக்கும் விவாதம்

Share

இரான் போர், இஸ்லாமிய நேட்டோ, சௌதி அரேபியா, பாகிஸ்தான்

பட மூலாதாரம், GOVERNMENT OF PAKISTAN

படக்குறிப்பு, பாகிஸ்தானும் செளதி அரேபியாவும் 2025-இல் ‘உத்திரீதியான பரஸ்பர பாதுகாப்பு’ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பிறகு மத்திய கிழக்கு பிராந்தியம் போரின் பிடியில் சிக்கியுள்ளது.

இதனால் அதிகரித்து வரும் பிராந்திய பதற்றங்களுக்கு மத்தியில், கத்தாரின் முன்னாள் பிரதமர் ஹமத் பின் ஜாசிம் பின் ஜபர் அல் தானியின் ஒரு பரிந்துரை விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.

இப்போது மீண்டும் ஒருமுறை அரபு-இஸ்லாமிய அரசியல் மற்றும் இராணுவக் கூட்டணி பற்றிய விவாதம் வேகம் எடுத்துள்ளது.

ஹமத் பின் ஜாசிம் பின் ஜபர் அல் தானி, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகள் உடனடியாகத் தங்கள் கருத்து வேறுபாடுகளைக் களைந்து ‘நேட்டோ’ பாணியில் ஒரு ‘பயனுள்ள இராணுவ மற்றும் பாதுகாப்பு கூட்டணியை’ உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.

இந்தக் கூட்டணியில் “செளதி அரேபியா மையப் பாத்திரத்தை வகிக்க வேண்டும் மற்றும் பாகிஸ்தான் மற்றும் துருக்கியுடன் ஆழமான ஒத்துழைப்பு இருக்க வேண்டும்” என்று அவர் கூறுகிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com