இறுதியில், 49-வது ஓவரின் கடைசி பந்தில் ஜடேஜா பவுண்டரி அடித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். அதைத்தொடர்ந்து, தொடர்ச்சியாக இரண்டாவது ஐ.சி.சி கோப்பையை வென்ற உற்சாகத்தில் மைதானம் எங்கும் இந்திய வீரர்கள் கொண்டாட்டத்தில் மூழ்கி தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.
இந்த நிலையில், வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, முகமது ஷமியின் தாயார் பாதம் தொட்டு விராட் கோலி ஆசீர்வாதம் வாங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஷமி தனது தாயாரை விராட் கோலியிடம் அறிமுகப்படுத்த, உடனே கோலி அவரின் காலைத் தொட்டு வணங்கி ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து, ஷமியின் தாயாருடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்.