வியட்நாமைச் சேர்ந்த 35 வயதான ஒருவர் கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது அவரின் மூளையில் சாப்ஸ்டிக் (chopstick) இருப்பது கண்டறியப்பட்டது. இரண்டு துண்டுகளாக உடைந்த நிலையில் சாப்ஸ்டிக் மூளையில் இருந்தது.
ஐந்து மாதங்களாகக் கடும் தலைவலி, மூக்கிலிருந்து நீர் வடியும் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் அந்த நபர். சி.டி ஸ்கேன் செய்த பிறகு, `மூளையில் அரிதான ஒரு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தான பிரச்னை’ என்று தெரிவித்துள்ளனர். ஆனால், எதனால் அந்தப் பிரச்னை என்பது பிடிபடவில்லை.