இந்தியாவில் பன்முக கலாச்சாரங்கள் இருக்கின்றன என்பதற்கு மாபெரும் அடையாளம் உணவுகள் தான். ஒவ்வொரு பகுதியிலும் பிரத்யேகமான உணவு ஆதிக்கம் செலுத்துகிறது. நிறம், மனம், சுவை, அதன் தயாரிப்பு என்று ஒவ்வொன்றிலும் உணவுகள் வேறுபடுகின்றன. ஆனால், அப்பகுதி மக்களின் பிடித்தமான உணவாகவும் அவை கோலோய்ச்சும்.
உதாரணத்திற்கு தென் மாநிலங்களைப் பொருத்தவரையில் அரிசி சோறு, இட்லி, தோசை, சாம்பார், சட்னி, வடை மற்றும் பொங்கல் போன்றவை அன்றாடம் நம் தட்டில் இடம்பெறுகின்ற பொதுவான உணவுகள். அதேபோல பெயரை கேட்டாலே அல்லது பார்த்த நிமிடத்தில் நம் நாவில் எச்சில் ஊற வைக்கின்ற தெருவோர உணவுக் கடைகள் இங்கு ஏராளம் உள்ளன. அதிலும் உளுந்து வடை, மசால் வடை, கீரை வடை என்று வடைகளிலேயே பல வெரைட்டிகளை கொடுத்து அசத்தும் தெருவோர கடைகளும் உண்டு.
அசைவ உணவுகளை பொருத்தவரையில் பிரியாணி, கெபாப், ஹலீம் என பல உணவுகளை ருசித்துப் பார்க்கலாம். நிஜாம்கள் வாழ்ந்த மண்ணாக கருதப்படும், தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் மாநகரில் உள்ள வாரங்கால் என்னும் பகுதியில் எண்ணற்ற சாலையோர உணவகங்கள் உள்ளன. அவற்றில் பல வகையான உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதில் பல உணவுகள் பிரபலமாக இருக்கின்றன.
இதில் சமீபத்திய வரவாக பிரபலமாகியிருப்பது பூரி மற்றும் குருமா ஆகும். வாராங்கல் பகுதியில் சுமார் 35 ஆண்டுகளாக நடத்தப்படும் ரமேஷ் ஹோட்டலில் இந்த உணவு விற்பனைக்கு கிடைக்கிறது. இங்கு காலை உணவாக இட்லி மற்றும் வடை உள்ளிட்டவை கிடைக்கும். ஆனாலும், அங்கு தயாராகும் பூரி, குருமா மற்றும் சட்னி ஆகியவற்றை சாப்பிடத்தான் வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
பூரிக்கு மட்டன் கிரேவி:
ரமேஷ் ஹோட்டலில் பூரி மொறு, மொறுவென இருக்கும் என்று அங்கு அடிக்கடி செல்லும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். பூரிக்கு உருளைக் கிழங்கு குருமா, தக்காளி தொக்கு என்று வழக்கமான சைட்டிஷ் வகைகளை சாப்பிட்டு பழகிய மக்களுக்கு, இங்கு பரிமாறப்படும் மட்டன் கிரேவி புதுவித அனுபவத்தை கொடுக்கிறது.
பூரி மற்றும் மட்டன் கிரேவியின் விலை சற்று கூடுதலாக இருந்தாலும், அந்த உணவில் சேர்க்கப்படும் மசாலா காரணமாகத்தான் இந்த விலை என்று ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். உணவுக் கடைகள் ஏராளமாக நிரம்பிய வாரங்கால் பகுதியில் ரமேஷ் ஹோட்டல் தனி இடத்தை பிடித்துள்ளது.
உள்ளூர் மக்கள் மட்டுமன்றி, வெளியூரில் இருந்து வருபவர்கள், சுற்றுலாப் பயணிகள் என அனைத்து தரப்பினரின் விருப்பத்திற்குரிய தேர்வாக ரமேஷ் ஹோட்டல் உள்ளது. அதற்கு முக்கிய காரணமே பூரியும், குருமாவும் தான் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
- First Published :