மிட்டாய் முதல் குக்கீஸ் வரை… கலிஃபோர்னியாவின் தடையும் நமக்கான பாடமும்..! – From candy to cookies… California’s ban and a lesson for us..!

Share

பழச்சாறுகள், மிட்டாய், குக்கீஸ் போன்ற உணவுப் பொருள்கள் மற்றும் ஸ்நாக்ஸில் சேர்க்கப்படுகிற, உடக்குத் தீங்கு விளைவிக்கும் சில ரசாயனங்களை அமெரிக்க மாநிலமான கலிஃபோர்னியா சில தினங்களுக்கு முன்னால் தடை செய்துள்ளது. உலகின் பல நாடுகளில் ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ள இந்த ரசாயனங்களை, கலிஃபோர்னியா வின் உணவுப் பாதுகாப்புச் சட்டமும் இப்போது தடை செய்துள்ளது. இந்தத் தடை 2027-ம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று தெரிகிறது.

தடை விதிக்கப்பட்டுள்ள ரசாயனங்கள்… அதற்கான காரணங்கள் என்னவென்று பார்ப்போமா..?

புரோமினேட்டட் தாவர எண்ணெய் (Brominated VEgetable oil) சில நரம்பியல் பிரச்னைகளை ஏற்படுத்துவதாகத் தெரிகிறது. ப்ரோபைல்பாரபென் (Propylparabens) நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடுகளை சீர்குலைக்கும் என்று சொல்லப் படுகிறது. பொட்டாசியம் புரோமேட் (Potassium bromate) சேர்த்த உணவுப் பொருள்களைத் தொடர்ந்து சாப்பிட்டால் டி.என்.ஏ மூலக்கூறுகளில் தீங்கை ஏற்படுத்தும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். 

ரெட் 3-ஐ அழகுசாதனப் பொருள்களில் பயன்படுத்துவதை 1990-ல் தடை செய்துவிட்ட அமெரிக்க அரசு, உணவில் இதைப் பயன் படுத்துவதைத் தடை செய்யவில்லை. தற்போது இந்த ரெட் 3 என்கிற நிறமி சேர்க்கப்பட்ட  மிட்டாய்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் ஏற்படலாம் என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். 

இந்தத் தடை சட்டத்துக்கான மசோதாவில் ஆளுநர் கவின் நியூசோம் கையெழுத்திட்டுப் பேசுகையில், “இந்தச் சட்டம் 2027 வரை செயல்படுத்தப்படாது. இந்தக் காலத்துக்குள் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளில் தடை செய்யப்பட்டுள்ள தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களைத் தவிர்க்க வேண்டும். தங்கள் சமையல் குறிப்புகளையும் திருத்த வேண்டும். கலிஃபோர்னிய மக்கள் தங்களுக்குப் பிடித்தமான, அதே நேரம் பாதுகாப்பான உணவுப் பொருள்களை ருசிக்க வேண்டும்”‘ என்றார். 

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com