Dhoni: ‘உலகக்கோப்பையை ஜெயிச்சதுக்கு தோனி மட்டும் காரணமில்ல..’ – ஆதங்கத்தை கொட்டிய ஹர்பஜன் சிங்!| WTC Finals : Harbhajan Singh’s tweet about Dhoni

Share

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்றிருந்தது. இதன் மூலம் 2013 க்குப் பிறகு இந்திய அணி ஐ.சி.சி கோப்பைகளை வெல்லவே இல்லை என்கிற சோக வரலாறும் தொடர்கிறது. இந்நிலையில், சமூகவலைதளங்கள் முழுவதும் ரசிகர்கள் தோனியை புகழ்ந்து எழுதி வருகின்றனர்.

2007 உலகக்கோப்பை வெற்றியைக் குறிப்பிட்டு, ‘அப்போது அந்த அணிக்கு பயிற்சியாளர் கூட இல்லை. அனுபவ வீரர்கள் ஆடுவதற்கே முன் வரவில்லை. அப்படி ஒரு சூழலில் முழுக்க முழுக்க இளம் வீரர்களை மட்டுமே கொண்டு ஆஸ்திரேலியாவை அரையிறுதியில் வீழ்த்தி தோனி உலகக்கோப்பையை வென்று கொடுத்தார்.’ என அந்த ரசிகர் பதிவிட்டிருந்தார்.

அந்த ட்வீட்டை மேற்கோள்காட்டி ஹர்பஜன் சிங் பதிவிட்டிருக்கும் பதில் ட்வீட்டில், ‘ஆம், இந்த இளம் வீரர் தன்னந்தனியாக ஆடிதான் உலகக்கோப்பையை வென்றார். அணியிலிருந்த மற்ற 10 வீரர்களும் ஆடவே இல்லை. எவ்வளவு பெரிய முரண் இது?

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com