”விளையாட்டில் உன் கவனம் இருக்க வேண்டும்”

Share

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் முதல்முறையாக களம் கண்டார். இந்த தொடரில் 4 போட்டிகளில் விளையாடிய அர்ஜுன் மொத்தம் 9.5 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில் வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்து வரும் தனது மகன் அர்ஜுன் குறித்து சச்சின் ஒரு சுவாரஸ்சிய கருத்தை பகிர்ந்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் “Scintillating Sachin” என்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற சச்சின் தனது குடும்பம் பற்றியும் மகன் பற்றியும் அர்ஜுனுக்கு தான் வழங்கிய அறிவுரை குறித்தும் பேசினார்.

அவர் கூறியதாவது, “என் இளம் வயதில் எனது குடும்பத்தினரிடம் இருந்து சிறப்பான ஆதரவு கிடைத்தது. அப்பா பேராசிரியராக இருந்தார். தாய் எல்.ஐ.சியில் பணிபுரிந்தார். சகோதரர் அஜித் டெண்டுல்கர் எனது பிரச்னைகள் அனைத்திற்கும் தீர்வு கொடுப்பார். எனக்கு இளம் வயதில் குடும்பத்தார் கொடுத்த சிறந்த சூழலை எனது மகன் அர்ஜுனுக்கு செய்து தர முயற்சிக்கிறேன்.

எனது பெற்றோர் எனக்கு சுதந்திரத்தை கொடுத்தனர். அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். நீங்கள் உங்களை பாராட்டினால் தான் மக்களும் உங்களை பாராட்டுவார்கள். எனது அப்பா எனக்கு சொன்ன அறிவுரையை நான் அர்ஜுனுக்கு சொல்கிறேன். விளையாட்டில் உன் கவனம் இருக்க வேண்டும் என்றார் என் அப்பா. அதுதான் அவர் கூறிய அறிவுரை.” இவ்வாறு சச்சின் பேசினார்.

இதையும் படிங்க: 146 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த பென் ஸ்டோக்ஸ்…

2022 ஐபிஎல் சீசனில் அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.20 லட்சம் என்ற அடிப்படை தொகையில் ஏலம் எடுத்தது. அந்தாண்டு அவர் ஒரு போட்டியிலும் விளையாடவில்லை. தொடர்ந்து அடுத்தாண்டு நடந்த ஏலத்தில் ரூ.30 லட்சம் தொகைக்கு அவரை மும்பை மீண்டும் தக்கவைத்தது. இந்த தொடரில் தான் அவருக்கு 4 போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com