உலக சுற்றுச்சூழல் தினம் – தமிழ்நாடு: அபாய கட்டத்தை நோக்கி உயரும் புவி வெப்பநிலை; தாங்குமா மாநிலம்?

Share

புவி வெப்பமடைதல்

பட மூலாதாரம், Getty Images

அடுத்த சில ஆண்டுகளில் ஏற்கெனவே அதிக வெப்பத்தால் தகித்துக்கொண்டிருக்கும் பூமி, முதல்முறையாக ஒரு முக்கிய வெப்பநிலை வரம்பைக் கடக்கக்கூடும் என்று காலநிலை விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

இப்போதிருந்து 2027ஆம் ஆண்டுக்குள், தற்போது நிலவும் பூமியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்ஷியஸுக்கு மேல் உயர 66% வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மேலும், வெப்பநிலை வேகமாக அதிகரிக்கும்போது பனிப்பாறைகள் உருகுவதும் வேகமெடுப்பதால், சென்னையின் கடல் மட்டமும் வேகமாக உயரக்கூடிய அபாயம் உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக நிலவியல் பேராசிரியர் இளங்கோ எச்சரிக்கிறார்.

இதனால், தமிழ்நாட்டின் நிலப்பகுதிகளில் கடுமையான வெப்ப அலைகள் வீசக்கூடும், மாதக்கணக்கில் மழை கொட்டித் தீர்க்கலாம், வறட்சி ஏற்படுவதோடு பொருளாதார இழப்புகளும் இருக்கலாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com