வெஸ்ட் இண்டீஸ் அணியின் துணை பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ஹூப்பர் நியமனம்

Share

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணையின் துணை பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் கார்ல் ஹூப்பர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் உலகக்கோப்பை போட்டிக்கான தகுதி சுற்று ஆகிய 2 தொடர்களை வெஸ்ட் இண்டீஸ் அணி எதிர்கொள்ள உள்ளது. இந்த நிலையில் கார்ல் சூப்பர் நியமனத்தை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 329 சர்வதேச போட்டிகளில் கார்ல் ஹூப்பர் விளையாடி உள்ளார். 15 ஆண்டுகளுக்கு மேலாக தேசிய அணியில் இடம் பெற்றிருந்த அவர் 10,500 ரன்கள் குறித்து இருக்கிறார். அனுபவம் மிக்கவரான ஹூப்பரின் நியமனம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பலம் சேர்க்கும் என்று முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 56 வயதாகும் ஹூப்பர் பிக் பேஷ் கிரிக்கெட் தொடரில் அடியிலாய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் துணை பயிற்சியாளராக பொறுப்பில் இருந்தார். இதேபோன்று கரீபியன் பிரீமியர் லீக்கில் ஆன்டிகுவா ஹாக்பில்ஸ் மற்றும் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

இதையும் படிங்க – சென்னை சூப்பர் கிங்ஸ்-க்கு வாழ்த்து சொன்ன சுந்தர் பிச்சை!

ஐக்கிய அரபு அமீரகம் அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர், நாளை மறுதினம் தொடங்க உள்ளது. இதன் பின்னர் உலகக் கோப்பை போட்டிக்கான தகுதிச் சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாட உள்ளது. 2 முறை உலக கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது தகுதி சுற்றில் விளையாடுவது, சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தொடரில் குரூப் ஏ யில் இடம் பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ள போட்டியில், அமெரிக்காவை எதிர்கொள்கிறது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com