இதில் இந்தியா, லெபனான், வானுவாடு, மங்கோலியா போன்ற நான்கு அணிகள் பங்கேற்றிருக்கிறது. முதல் போட்டியில் மங்கோலியாவை வீழ்த்திய சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணி இரண்டாவது போட்டியில் வனுவாடு அணியை 1-0 கணக்கில் வீழ்த்தி தங்களது 2-வது வெற்றியைப் பதிவு செய்திருக்கின்றனர்.
இந்தப் போட்டியில் 80-வது நிமிடத்தில் ஒரு கோலை அடித்து தனது 86 -வது சர்வதேச கோலைப் பதிவு செய்த சுனில் சேத்ரி அந்த மகிழ்ச்சியான தருணத்தில் தனது மனைவி கர்ப்பமாக உள்ள செய்தியை டி-சர்ட்க்குள் கால்பந்தை வைத்து வித்தியாசமான முறையில் பகிர்ந்திருந்தார்.