3வது முறையாக ஆளுநரை சந்திக்கும் விஜய் – விசிக முடிவு என்ன? நேரலை

Share

3வது முறையாக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய விஜய் -விசிக முடிவு என்ன? நேரலை

பட மூலாதாரம், DIPR

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தமிழ்நாடு ஆளுநர் அர்லேகரை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து, மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரினார். விஜய் ஆளுநரை சந்திப்பது இது மூன்றாவது முறையாகும்.

முன்னதாக தமிழ்நாட்டில் தவெக ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு வழங்கியுள்ளன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதிதாக அமையும் சட்டப்பேரவைக்கு ராமச்சந்திரன், மாரிமுத்து ஆகிய 2 பேர் தேர்வாகியுள்ளனர். அதே போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவர் செல்லசாமி தவெகவு-க்கு ஆதரவு கடிதத்தை வழங்கியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் சேர்த்து தவெக ஆட்சியமைக்க 116 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்துள்ளது.

தவெக வென்ற தொகுதிகள் 108. இரு தொகுதிகளில் வென்றுள்ள விஜய், ஒன்றில் ராஜிநாமா செய்ய வேண்டும் என்பதால் தவெகவின் பலம் 107 ஆகும். அப்போது, அவையின் பலம் 233 ஆக குறையும் என்பதால் பெரும்பான்மைக்கு 117 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com