ஆளுநருடன் விஜய் மீண்டும் சந்திப்பு: அதிமுக, விசிக, இந்திய கம்யூ. கூறியது என்ன?

Share

'கட்சியின் நலன் கருதி சில அவசர முடிவுகளை எடுக்க நேரிடலாம்' - எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியது என்ன?

பட மூலாதாரம், DMK

வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் அக்கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சியமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அக்கட்சிக்கு காங்கிரஸ் தனது ஆதரவை உறுதிப்படுத்திவிட்டது. விசிக மற்றும் இடதுசாரிகளிடம் அக்கட்சி ஆதரவு கேட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக தமிழக அரசியலில் என்ன நடக்கிறது?

அருண்ராஜ்

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் ஆதரவை கோரிய தவெகவின் அருண்ராஜ்

ஸ்டாலின் பேசியது என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வென்ற திமுக எம்.எல்.ஏக்களுடன் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில், கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம் தெரிவிப்பது, முடிவெடுக்கும் அதிகாரத்தை ஸ்டாலினுக்கு வழங்குவது உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அந்தத் தீர்மானத்தில், ”காங்கிரஸ் தனது பழைய குணத்தை மாற்றிக்கொள்ளவில்லை என்று குறிப்பிட்ட” திமுக, தேர்தலுக்கு முன்பும் பின்பும் உண்மையாக நடந்துகொள்ளாத கட்சி காங்கிரஸ் என்று விமர்சித்தது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com