விசிலடிக்காத 8 மாவட்டங்கள் `டு' 10 ஆண்டுகளுக்கு பின் சட்டசபை செல்லும் கட்சி – 2026 தேர்தல் ஹைலைட்ஸ்

Share

முதல்வர் வேட்பாளர்கள்… ஷாக், சர்ப்ரைஸ்!

2026 சட்டசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களாக நான்கு பேர் போட்டியிட்டனர். தமிழக வெற்றிக் கழகத்த்தின் விஜய்க்கு இது முதல் தேர்தல். சந்தித்த முதல் தேர்தலிலேயே முன்று இலக்கத்தில் சீட்டுகளை வென்று தவெக-வை தனிப் பெரும் கட்சியாக்கி சாதித்திருக்கிறார். சிட்டிங் முதலமைச்சரான மு.க.ஸ்டாலினுக்கோ அதிரிச்சியான முடிவு. சொந்தத் தொகுதியான கொளத்தூரில் வெல்ல முடியவில்லை. அதிமுக-வின் எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த முறை இருந்த எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்து பறிபோய், கட்சி மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அதேநேரம் இந்த தேர்தலில் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர என்ற பெருமை கிடைத்துள்ளது. ‘நாம் தமிழர்’ சீமான் கடந்த தேர்தலில் கட்சியில் ஒரே வேட்பாளராக போட்டியிட்ட தொகுதியில் டெபாசிட் வாங்கியிருந்தார். இந்த தேர்தலில் அந்த டெபாசிட்டையும் இழந்து விட்டார்.

TVK Vijay -
TVK Vijay –

தவெக-வுக்கு பூஜ்யம்!

233 இடங்களில் போட்டியிட்டு 108 இடங்களை வென்றது தவெக. எனினும் விழுப்புரம், அரியலூர், திருவாரூர், தென்காசி, நீலகிரி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கன்னியாகுமரி ஆகிய எட்டு மாவட்டங்களில் இந்தக் கட்சி ஒரு தொகுதியைக்கூட கைப்பற்றவில்லை.

பெரியகருப்பன்
பெரியகருப்பன்

ஒத்த ஓட்டு!

இந்த தேர்தலின் மிகப்பெரிய சோகம் திமுக-வின் பெரியகருப்பனுக்கு நிகழ்ந்தது. திருப்பத்தூர் தொகுதியில் ஒரேயொரு ஓட்டில் தவெக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார் இவர்.

டிடிவி தினகரன்

சட்டசபையில் குக்கர்!

ஜெயலலிதா மறைவுக்ககுப் பிறகு 2017ம் ஆண்டு சுயேட்சை உறுப்பினராக சட்டசபைக்குச் சென்ற டிடிவி தினகரன், தனது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஓர் உறுப்பினரை சட்டசபைக்கு அனுப்ப உள்ளார்.

மீண்டும் தேமுதிக!

2011 தேர்தலில் எதிர்க்கட்சியாக சட்டசபையில் நுழந்த தேமுதிக-வால், 2016 மற்றும் 2021 தேர்தல்களில் ஓர் உறுப்பினரைக்கூட அனுப்ப முடியவில்லை. இந்த தேர்தலில் ஒரேயொரு உறுப்பினராக இந்த தேர்தலில் அதன் தலைவர் பிரேமலதா மட்டும் சட்டசபைக்குச் செல்லவிருக்கிறார்.

வைகோ

ஆப்சென்ட் ஆன மதிமுக‌!

அமையவிருக்கும் 17வது சட்டசபையில் வைகோவின் மதிமுக-வைச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏக்கள் இடம் பெற்றுள்ளனர். எனினும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு இவர்கள் வென்றதால் சட்டசபை கோப்புகளின்படி இவர்கள் திமுக உறுப்பினர்களே.

தமிழ்நாடு சட்டமன்றம்

முதல் தொகுதியும் கடைசி தொகுதியும்!

தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளின் வரிசை எண்களின் படி முதல் தொகுதி சென்னை புறநகரான கும்மிடிப்பூண்டி. இங்கு தவெக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். 234 வது தொகுதி கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர். இங்கு காங்கிரஸ் கட்சியின் ராஜேஷ் குமார் வென்றுள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com