marriage system: நம்முடைய திருமண அமைப்பை ’ரீ டிசைன்’ செய்ய வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம். அது என்ன ரீ டிசைன்? | Why do we need to ‘redesign’ our marriage system?
செக்ஸ் தாம்பத்தியத்தின் அடிப்படையாக இருந்தது. அது தற்போது போய்விட்டது. செக்ஸில் பிரச்னைகளே இல்லாதபோதுகூட, திருமணம் தாண்டிய உறவுகள் ஏற்பட்டு விடுகின்றன. திருமணத்தின் உண்மையான அடிப்படையே லீகல் கான்ட்ராக்ட் தான். இருவரிடமும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளும், சகித்துக்கொள்ளும் மனப்பான்மை இருந்தால் தாம்பத்தியங்களின் ஆயுள் நீட்டிக்கும். இல்லையென்றால் முறிந்துபோகும். இதைப் படிக்கும் சிலர், ’எல்லாத்துக்கும் காரணம் இன்னிக்கு இருக்கிற பெண்கள்தான்’ என்று சுலபமாகச் சொல்லி விடலாம். சில விதிவிலக்குகளைத் தவிர, அதில் உண்மை கிடையாது. இன்றைய பெண்கள் தங்கள் சுயவிருப்பு, வெறுப்புடன்…









