பாகிஸ்தானை பாராட்டிய டிரம்ப் – இந்திய பிரதமர் மோதி குறித்து கூறியது என்ன?

Share

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Ian Maule/Bloomberg via Getty Images Trump Turns From Iran To Economy As GOP Faces Midterm Stress

படக்குறிப்பு, பாகிஸ்தானின் தலைமையைப் பாராட்டிய டிரம்ப், “பாகிஸ்தானின் ஃபீல்ட் மார்ஷலும் பிரதமரும் மிகச்சிறந்த பணியைச் செய்து வருகின்றனர். நான் அங்கு செல்லக்கூடும்,” என்றார்.

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இரானுடன் அமைதி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காகத் தான் தனிப்பட்ட முறையில் இஸ்லாமாபாத் செல்லக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஒரு கேள்விக்கு பதிலளித்த அவர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியைப் பாராட்டியதுடன், அவரைத் தனது ‘நல்ல நண்பர்’ என்றும் குறிப்பிட்டார்.

அமைதி செயல்முறைக்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் தற்போது தெஹ்ரானில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

வியாழக்கிழமை இரவு (இந்திய நேரப்படி) அதிபர் மசூத் பெசெஷ்கியானையும் அவர் சந்தித்தார்.

டொனால்ட் டிரம்ப் என்ன கூறினார்?

இரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்பு குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த டிரம்ப், “பாகிஸ்தான் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. நான் இஸ்லாமாபாத் செல்ல முடியும். பாகிஸ்தானில் ஒப்பந்தம் கையெழுத்தானால், நான் இஸ்லாமாபாத் செல்ல முடியும்” என்று கூறினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com