பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்த இந்திய வீரர்கள்! – ஆசியக்கோப்பையில் என்ன நடந்தது? | Indian players refused to shake hands; Pakistan captain unhappy! – What happened in Asia Cup?

Share

‘பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக!’

போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கைகுலுக்கி வாழ்த்துகளைப் பரிமாறி வெளியேறுவது விளையாட்டின் வழக்கம். ஆனால், நேற்றையப் போட்டிக்குப் பிறகு இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்தனர்.

போட்டிக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ‘பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பாதிப்புக்குள்ளான மக்களின் பக்கம் நிற்பதன் மூலம் எங்களின் ஒற்றுமையை வெளிக்காட்ட விரும்புகிறோம்.

துணிச்சலையும் தைரியத்தையும் கொண்டு நின்ற எங்களின் ஆயுதப்படை வீரர்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறோம். இதேபோல எக்காலத்திலும் அவர்கள் எங்களுக்கு உத்வேகம் அளித்துக் கொண்டே இருப்பார்கள் என நம்புகிறோம்.

நாங்களும் எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் களத்தில் சிறப்பாக செயல்பட்டு அவர்களின் முகத்தில் புன்னகையை வரவழைப்போம்.’ என்றார்.

‘பாகிஸ்தான் கேப்டன் அதிருப்தி!’

இந்திய அணியின் வீரர்கள் கைகுலுக்க மறுத்ததில் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் கடும் அதிருப்தியடைந்தார். இதனால் போட்டிக்குப் பிறகான கேப்டன்களின் பேட்டியில் அவர் கலந்துகொள்ளவில்லை.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com