Doctor Vikatan: கண்களில் இன்ஃபெக்ஷன், கட்டிக்கு தாய்ப்பால் விடுவது, நாமக்கட்டி போடுவது சரியா?
Doctor Vikatan: கண் தொடர்பான பிரச்னைகளுக்கு கண்களில் தாய்ப்பால் விடும் வழக்கம் பல காலமாக இருக்கிறது. இது எந்த அளவுக்கு சரியானது? தாய்ப்பாலுக்கு அப்படி ஏதேனும் மருத்துவ குணங்கள் உண்டா?, அதே போல கண்களின் மேலோ, கீழோ கட்டிகள் வந்தால் நாமக்கட்டியைக் குழைத்துப் போடுகிறார்கள். இது சரியான சிகிச்சையா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர். கண் மருத்துவர் விஜய் ஷங்கர்குழந்தைகளுக்கான உணவில் தாய்ப்பால் முதலும் முக்கியமுமான இடத்தில் இருக்கிறது. பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலைவிட ஆகச் சிறந்த உணவு வேறில்லை. தாய்ப்பால் நல்ல உணவு என்பதால், அதை…









