Monthly Archives: March, 2025

IND Vs AUS: “முதலில் அவரைக் கண்டு பயப்படாதீர்கள்” – ஆஸ்திரேலியாவை வீழ்த்த ஹர்பஜன் தரும் `3′ ஐடியாஸ் | Harbhajan gave advice india to beat australia in champions trophy semi final

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஊடகத்திடம் பேசிய ஹர்பஜன் சிங், “முதலில், டிராவிஸ் ஹெட் மீதான பயத்தை உங்கள் மனதில் இருந்து அகற்றிவிட்டு, அவரை அவுட்டாக்க முயற்சி செய்யுங்கள். ஷமி சார், போதும் டிராவிஸ் ஹெட்டை இனி ரன் அடிக்க விடாதீர்கள். இரண்டாவது, அந்த அணியில் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ் போன்ற ஹிட்டர்கள் இருக்கின்றனர். அவர்கள் பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசுகிறார்கள். எனவே, வேகப்பந்து வீச்சில் அவர்களை ரன் அடிக்க விடாதீர்கள். மூன்றாவது, இதுவொரு நாக் அவுட் கேம். நீங்கள் அதிகம்…

`திமுக கூட்டணியை உருவாக்கியதில் விசிக-வுக்கும் பங்கு உள்ளது..!' – திருமாவளவன்

“திமுக கூட்டணியில் எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை, கூட்டணியை உருவாக்கியதில் விசிக-வுக்கும் பங்கு உள்ளது. அதே நேரம், அதைக் காப்பாற்றும் பொறுப்பும் எங்களுக்கு உள்ளது” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.ஆர்பாட்டத்தில்உயர் நீதிமன்ற நீதிபதி நியமனங்களில் அனைத்து சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாவட்ட நீதிமன்றம் முன்பு நடந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட திருமாவளவன், செய்தியாளர்களிடம் பேசும்போது, “உயர் நீதிமன்றத்தில் 12 நீதிபதிகளை நியமிக்க உள்ளார்கள்.…

இந்தியாவிடம் ‘வெற்றிகரமான தோல்வி’ கண்ட நியூஸிலாந்து – ஆஸி.யை ‘தவிர்த்த’ கதை இது! | 2025 Champions Trophy: Newzeland looses to India; the tale behind explained

துபாயில் நேற்று நடைபெற்ற இந்தியா – நியூசிலாந்து போட்டி அரையிறுதி வாய்ப்புக்கான போட்டி என்றால் விறுவிறுப்பாக அமைந்திருக்கும். மாறாக, அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை சந்திப்பதை தவிர்ப்பது எப்படி என்று இரு அணிகளும் பெரிய அளவில் போட்டாப் போட்டியுடன் ஆடியது போலவே இருந்தது. அதாவது, வெற்றி பெறுவது குறித்து இரு அணிகளுக்கும் பெரிய ஆர்வமில்லை. கடைசியில் இந்த ஆர்வத்தில் நியூஸிலாந்து அணி ‘வென்றது’. எப்படி எனில், அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை சந்திக்காமல் தென் ஆப்பிரிக்காவை சந்திக்கிறது நியூசிலாந்து. வெற்றி பெற ஆர்வமில்லாவிட்டாலும்…

Doctor Vikatan: முடியே இல்லாமல் பிறந்த குழந்தை… வளர்ந்ததும் இப்படியேதான் இருக்குமா? | If a baby is born without hair, will it remain that way when they get older?

குழந்தையின் முடி வளர்ச்சி என்பது கருவிலிருக்கும் போதான நிலை, பிரசவத்துக்குப் பிறகான நிலை என இரண்டு கட்டங்களைக் கொண்டது. பிரசவத்துக்குப் பிறகான குழந்தையின் முடி வளர்ச்சியானது 18 மாதங்களில்கூட ஆரம்பிக்கலாம். இரண்டாம்கட்ட வளர்ச்சியானது ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடலாம். ஒரு சில குழந்தைகளுக்கு முதல் கட்ட வளர்ச்சி முடிவதற்கு முன்பே, இரண்டாம் கட்ட வளர்ச்சி ஆரம்பிக்கும். அது வெளிப்படையாகத் தெரிவதில்லை. இன்னும் சில குழந்தைகளுக்கு முதல்கட்ட முடி வளர்ச்சியானது முற்றிலும் உதிர்ந்து, அதையடுத்து நீண்ட நாள்களுக்குப் பிறகே இரண்டாம் கட்ட…

IND vs NZ வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட் – இந்திய அணிக்கு காத்திருக்கும் புதிய சவால்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், க.போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காக3 மார்ச் 2025, 03:23 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு நிமிடத்துக்கு முன்னர்ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிக்கு இந்திய அணி 6-வது முறையாகத் தகுதி பெற்றுள்ளது.துபையில் நேற்று நடந்த குரூப் ஏ பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.முதலில் பேட் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் சேர்த்தது. 250 ரன்கள் சேர்த்தால் வெற்றி…

Varun Chakaravarthy : 'சினிமாவில சாதிக்கணுங்றதுதான் கனவா இருந்துச்சு, ஆனா..!' – வருண் சக்ரவர்த்தி

சாம்பியன்ஸ் டிராபியில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாக செயல்பட்டிருந்தார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 2021 ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக வருண் சக்ரவர்த்தி ஆடியிருந்தார். வருண் சக்ரவர்த்தி ஆனால், சிறப்பாக ஆடாததால் அணியிலிருந்து நீக்கம் செய்யபட்டார். இப்போது அதே துபாயில் இந்திய அணிக்காக சிறப்பாக ஆடி ஆட்டநாயகன்…

“2 மாதங்களில் 185 கொலைகள், பெண்களுக்கு எதிராக 273 புகார்கள்..'' – எடப்பாடி பழனிச்சாமி காட்டம்

அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தேனி பெரியகுளம் ரோட்டில் மதுராபுரில் நடந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி, “அதிமுக ஆட்சி இருண்டகால ஆட்சி என்று ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கிறார். தேனி மாவட்டத்திற்கு வந்து பாருங்கள். ஜெயலலிதா ஆட்சியில் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களையும் கொண்டுவந்துள்ளோம். 18-ம் கால்வாய், 58 -ம் கால்வாய் திட்டம் கொண்டுவரப்பட்டது. வீரபாண்டியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டது. முல்லைப்பெரியாறு அணைக்காக சட்டப்போராட்டம் நடத்தி உரிமையை பெற்றிருக்கிறோம். அதிமுக…

கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி வென்றது எப்படி? – அரை இறுதியில் ஆஸ்திரேலியாவுடன் மோதல் | India beat New Zealand by 44 runs, set semifinal date with Australia

துபாய்: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வருண் சக்கவர்த்தி அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். இதையடுத்து முதல் அரை இறுதியில் ஆஸ்திரேலிய அணியை, இந்தியா எதிர்த்து விளையாடும். சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு இந்தியா, நியூஸிலாந்து அணிகள் மோதிய கடைசி லீக் ஆட்டம்…

யுக்ரேன் விவகாரம் குறித்து ஐரோப்பிய நாடுகளின் உச்சிமாநாடு – ‘தலைமுறைக்கான வாய்ப்பு’ என கூறிய ஸ்டாமர்

பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, ஐரோப்பிய தலைவர்களின் உச்சி மாநாடு லண்டனில் நடைபெற்று வருகிறது5 மணி நேரங்களுக்கு முன்னர்யுக்ரேன் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக ஐரோப்பிய தலைவர்களின் உச்சி மாநாடு லண்டனில் நடைபெற்று வருகிறது. பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமரால் நடத்தப்படும் இந்த உச்சி மாநாடு உலகின் கவனத்தை ஈர்த்துள்ளதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை என்றாலும், இதற்கு முன்னதாக யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திப்பு இதற்கான முக்கியத்துவத்தை கூட்டியிருக்கிறது.யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில்,…

IND vs NZ: `வருண் ஒரு ரெட் டிராகன்’ – ஸ்பின்னர்களை வைத்து சண்டை செய்த இந்தியா; சரிந்த நியூசிலாந்து |India vs Newzealand – Match Report

‘வருண் சக்கரவர்த்தி மேஜிக்!’9 விக்கெட்டுகளை ஸ்பின்னர்களுக்கு எதிராகத்தான் நியூசிலாந்து இழந்திருந்தது. இந்த 9 விக்கெட்டுகளில் 7 விக்கெட்டுகள் lbw அல்லது போல்ட் முறையில் வந்திருந்தது. எனில், இந்திய ஸ்பின்னர்கள் அத்தனை டைட்டான லைன் & லெந்த்தில் வீசினார்கள் என புரிந்துகொள்ளலாம். தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி மட்டும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதே துபாய் மைதானத்தில்தான் 2021 இல் அவரது கரியர் ஆரம்பிப்பதற்குள் முடிந்திருந்தது. ஐ.பி.எல் லிலும் உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பாக ஆடி மூன்று ஆண்டுகள் கழித்து…