ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து 41 பேர் பலியாகியும் மனமிரங்காத ஆளுநர்: அன்புமணி கண்டனம்
சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று டிவிட்டரில் கூறியுள்ளதாவது: தூத்துக்குடியில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.3.5 லட்சத்தை இழந்த பாலன் என்ற பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன். ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கடந்த 2021ம் ஆண்டு நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட பிறகு நிகழ்ந்த 41வது தற்கொலை இதுவாகும். கடந்த 3 நாட்களில் இரு இளைஞர்கள் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொண்டது பெரும் சோகமாகும். தந்தைக்கு அனுப்ப வேண்டிய ரூ.50…









