மூன்று பெற்றோர் குழந்தை: மூன்று பேர் மரபணுக்களுடன் உருவான குழந்தை – சாத்தியமானது எப்படி?
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்பிரிட்டனில் முதன் முறையாக 3 பேரின் டி.என்.ஏ.க்களுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது. இதனை அந்நாட்டின் குழந்தைப் பேறு ஒழுங்குமுறை ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. தீர்க்க முடியாத மைட்டோகாண்ட்ரியல் நோய்களுடன் குழந்தைகள் பிறப்பதை தடுக்கும் முயற்சியாக இந்த முன்னோடி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவரையிலும், இந்த வகையில் 5 குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால், கூடுதல் விவரங்கள் ஏதும் இல்லை. மைட்டோகாண்ட்ரியல் நோய்கள் குணப்படுத்த முடியாதவை. குழந்தை பிறந்த சில நாட்களில் அல்லது சில மணி நேரத்தில்…









