கடைசி பந்து வரை நீடித்த த்ரில்லர் மேட்ச்… பஞ்சாபை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா அணி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் கொல்கத்தா அணி கடைசிப் பந்தில் வெற்றி இலக்கை எட்டியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து அணியின் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங் மற்றும் கேப்டன் ஷிகர் தவான் ஆகியோர் களத்தில் இறங்கினர். 12 ரன்னில் பிரப்சிம்ரன் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளிக்க அடுத்து வந்த பனுகா ராஜபக்சே ரன் ஏதும்…









